[ad_1] மழைக்காலத்தில் இந்தியாவில் பார்க்க வேண்டிய மயக்கும் 'நீர்வீழ்ச்சிகள்'

Jun 21, 2024

மழைக்காலத்தில் இந்தியாவில் பார்க்க வேண்டிய மயக்கும் 'நீர்வீழ்ச்சிகள்'

Anoj

ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் 2வது உயரமான நீர்வீழ்ச்சியாகும். 900 அடி உயரத்தில் அதன் 4 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டக்கூடும். மழைக்காலத்தில் அந்த 4 கிளைகளும் ஒன்றாக இணைவதால், பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

Image Source: unsplash-com

துத்சாகர் நீர்வீழ்ச்சி

இது கோவாவில் மாண்டோவி ஆற்றில் அமைந்துள்ள 4 அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். மழைக்காலத்தில் இந்த அருவியின் அழகு வசீகரிக்கக்கூடும்

Image Source: instagram-com/_travel-_-time_

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, கேரளாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். இங்கு 80 அடிக்கு மேல் இருந்து நீர் கீழே விழுகிறது. இதனை சுற்றிலும் பசுமையான சுற்றுச்சூழல் இருப்பதால், மழைக்காலத்தில் அற்புதமான காட்சியை தரக்கூடும்

Image Source: instagram-com/eldhothariyan_phoneographer

நோகலிகை நீர்வீழ்ச்சி

இந்த அழகிய நீர்வீழ்ச்சி, மேகாலயாவில் சிரபுஞ்சி அருகே அமைந்துள்ளது. இதன் உயரம் 1,115 அடி ஆகும். மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சி மட்டுமின்றி அதன் பசுமையான சுற்றுப்புறங்களின் பரந்த காட்சிகளையும் காணலாம்

Image Source: unsplash-com

சிவனசமுத்திர நீர்வீழ்ச்சி

இது கர்நாடகாவில் அமைந்துள்ள மற்றொரு மிகப்பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இது ககனசுக்கி, பாராசுக்கி என இரண்டு அருவிகளாகப் பிரிந்து பாய்ந்து ஓடுகின்றன. இந்த அருவிகளை சுற்றிலும் மலைச்சிகரங்கள், பச்சைப் பசேலென மரம் செடி கொடிகள் இருப்பதால் சுற்றுலா வாசிகளை மயக்க செய்கிறது

Image Source: instagram-com/pixel_photographer_gal

யானை நீர்வீழ்ச்சி

யானை நீர்வீழ்ச்சி, ஷில்லாங்கிற்கு அருகில் அமைந்துள்ள மூன்று அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். அதன் அடிவாரத்தில் இருந்த யானை வடிவ பாறையின் காரணமாக இப்பெயர் சூட்டப்பட்டது. ஆனால், நிலநடுக்கத்தில் அந்த பாறை இடிந்துபோனது

Image Source: unsplash-com

குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி

கர்நாடகாவில் உள்ள குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் ஒன்றாகும்.1493 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி, மழைக்காலத்தில் கட்டாயம் வேண்டிய இடமாகும்

Image Source: instagram-com/your-travel-journey

பாக்சு நீர்வீழ்ச்சி

தர்மசாலாவில் உள்ள மெக்லியோட் கஞ்ச் அருகே அமைந்துள்ள பாக்சு நீர்வீழ்ச்சி, சுற்றுலாப் பயணிகளின் ஃபேவரைட் ஸ்பாட்டாகும். மழைக்காலத்தில் இந்த அருவி மிகவும் அழகாக இருக்கக்கூடும்

Image Source: instagram-com/dharamshalaholidays

கந்ததர் நீர்வீழ்ச்சி

ஒடிசாவில் அமைந்துள்ள கந்ததர் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் 12 வது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். மழைக்காலத்தில் சுமார் 801 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

Image Source: instagram-com/pure_odisha

Thanks For Reading!

Next: ‘தீவுகளின் தேசம் ஜப்பான்’ தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள்!

[ad_2]