[ad_1] மழைக்காலத்தில் இந்தியாவில் செல்லக்கூடாத இடங்கள் என்ன தெரியுமா?

Jul 15, 2024

மழைக்காலத்தில் இந்தியாவில் செல்லக்கூடாத இடங்கள் என்ன தெரியுமா?

Anoj

சிம்லா, ஹிமாச்சல்

ஹிமாச்சல் பிரதேசத்தின் தலைநகரமான சிம்லா, மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். ஆனால், மழைக்காலத்தில் கனமழை பெய்கையில் அதிகப்படியான நிலச்சரிவுகளை சந்திக்கும் நகரமாகவும் இருக்கக்கூடும்

Image Source: unsplash-com

நைனிடால், உத்தரகாண்ட்

இந்த பிரபலமான மலை வாசஸ்தலமானது மழைக்காலங்களில் பல இடங்களில் நிலச்சரிவை சந்திக்க நேரிடும். மழை மற்றும் மூடுபனி காரணமாக மாநிலம் முழுவதும் பல சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கலாம்

Image Source: unsplash-com

கொல்கத்தா, மேற்கு வங்காளம்

மழைக்காலத்தில் கொல்கத்தா நகரம் அதிகப்படியான மழைபொழிவை சந்திக்கக்கூடும். ஏராளமான புயல் தாக்குதல்களை எதிர்கொள்வதால் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

Image Source: unsplash-com

மும்பை, மகாராஷ்டிரா

மழைக்காலம் மும்பை மாநகருக்கு மிகவும் சிக்கலானது. தொடர்ச்சியாக மழை பெய்வதால் போக்குவரத்து நெரிசல், தண்ணீர் தேங்குதல் மற்றும் உள்ளூர் ரயில் போன்ற பொது போக்குவரத்து பாதிக்கப்படலாம்

Image Source: unsplash-com

மேகாலயா

மேகாலயாவில் குறிப்பாக சிரபுஞ்சி நகரம், மழைக்காலத்தில் அதிக மழைப்பொழிவை அனுபவிக்கிறது. தொடர்ச்சியாக மழை பெய்வதால் உங்க பயண திட்டங்களும், வெளிப்புற செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்

Image Source: unsplash-com

மணாலி, ஹிமாச்சல்

மணாலி, பள்ளத்தாக்கு மற்றும் பனிச்சறுக்கு போன்ற சாகச விளையாட்டுகளுக்கு பெயர்பெற்றது. ஆனால், மழைக்காலத்தில் நிலச்சரிவு மற்றும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. குறிப்பாக, திடீர் வெள்ள அபாயங்களும் விடுக்கலாம்.

Image Source: pexels-com

முசோரி, உத்தரகண்ட்

நைனிடால் போலவே முசோரி நகரமும் கனமழை காரணமாக அதிகபடியான நிலச்சரிவை சந்திக்கலாம். பருவமழை சாதாரணமாக வசீகரமான மலைவாசஸ்தலத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடும்

Image Source: unsplash-com

அசாம்

ஒவ்வொரு பருவமழையிலும், வடகிழக்கு மாநிலமான அசாம், கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை சந்திக்கிறது. இதன் காரணமாக, பல நேரங்களில் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும்

Image Source: unsplash-com

லோனாவாலா, மகாராஷ்டிரா

இயற்கை எழில் கொஞ்சும் லோனாவாலா, மகாராஷ்டிராவின் பிரபலமான சுற்றுலா தளமாகும். ஆனால், மழைக்காலத்தில் அதிகபடியான மழை பொழிவு, நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து நிறுத்தத்தை சந்திக்கலாம். மேலும், அருவிகளிலும் நீர் வரத்து அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும்

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: மாலத்தீவை மிஞ்சும் அழகு - இந்தியாவில் அந்த இடத்திற்கு செல்லுங்கள்!

[ad_2]