Jul 4, 2024
ஓரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் ரோஸ் வாட்டரை ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்படி குளிர்ச்சியாக்கப்பட்ட ரோஸ் வாட்டரை காட்டன் பஞ்சில் எடுத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
Image Source: istock
காட்டன் பஞ்சுகளில் ரோஸ் வாட்டரை நனைத்து கண்களுக்கு ஐ பேடாக பயன்படுத்தலாம். இது கண்களில் உள்ள சோர்வை போக்க பயன்படுகிறது. கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
Image Source: istock
தேநீர் பேக்குகளையும் கண்களுக்கு ஐ பேடாக பயன்படுத்தலாம். கண் இமைகளில் இந்த ஐ பேடுகளை வைத்து பயன்படுத்தலாம். கண்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.
Image Source: istock
ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கருவுடன் 3 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து கழுவுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துங்கள்.
Image Source: pexels-com
இந்த ஃபேஸ் பேக்கில் உங்களுக்கு முட்டையின் வெள்ளைக் கரு பிடிக்கவில்லை என்றால் ரோஸ் வாட்டர் அல்லது ஆரஞ்சு சாற்றை பயன்படுத்தலாம். பாதாம் , உலர்ந்த அல்லது பொடியாக்கப்பட்ட எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
Image Source: istock
பழ ஃபேஸ் மாஸ்க் வெப்ப மற்றும் ஈரப்பதமான காலநிலையில் புத்துணர்ச்சியூட்ட பயன்படுகிறது. இதில் வெள்ளரிக்காய் சாறு சேர்க்கலாம். பப்பாளி, ஆப்பிள், தர்ப்பூசணி, அன்னாசி, மாம்பழம் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து கழுவுங்கள்.
Image Source: istock
மழைக்காலத்தில் கூந்தலை அடிக்கடி கழுவ வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் லெமன் சாறு கூந்தலை ஷாம்பு போட்டு அலசுங்கள். அதன் பிறகு சிறுதளவு தண்ணீரில் லெமன் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கூந்தலை அலசுங்கள்.
Image Source: istock
சில சமயங்களில் தலைக்கு ஷாம்பு போடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு முட்டையின் வெள்ளைக் கருவை முடியில் தடவுங்கள். இது கூந்தலில் உள்ள எண்ணெய் தன்மையைக் குறைத்து கூந்தலுக்கு பளபளப்பை தருகிறது.
Image Source: pexels-com
மழைக்காலத்தில் புத்துணர்ச்சி பெற பாதங்களை பராமரிப்பது மிகவும் அவசியம். வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் உப்பு, 1/2 கப் லெமன் சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சில துளிகள் டீ ட்ரி ஆயிலை சேருங்கள். இதில் பாதங்களை 1/2 மணி நேரம் ஊற வைத்து பிறகு கழுவுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!