Aug 20, 2024
மழைக்காலத்தில் ஈரப்பதமான காற்று நம் கூந்தலை பாதிக்கிறது. அதிகப்படியான ஈரப்பதம் உச்சந்தலையில் பூஞ்சை தொற்றை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் கூந்தலுக்கு ஏற்ற மாய்ஸ்சரைசிங் ஷாம்பு, கண்டிஷனரை தேர்வு செய்ய வேண்டும்.
Image Source: pexels-com
கூந்தலை ஆரோக்கியமாக வைக்க லீவ் இன் கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இது தலைமுடியை சீராக வைக்க உதவுகிறது. லீவ் இன் கண்டிஷனரை பயன்படுத்துவது வறட்சியை குறைக்கும். கூந்தலில் பளபளப்பை அதிகரிக்கிறது.
Image Source: istock
மழைக்காலத்தில் உங்கள் தலைமுடியை அதிகமாக கழுவுவது கூந்தலில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி முடி உதிர்தலுக்கு வழி வகுக்கும். 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளித்தால் போதுமானது.
Image Source: istock
கூந்தலை உலர வைக்க மென்மையான துண்டைக் கொண்டு உலர்த்துங்கள். அதிகமாக துண்டைக் கொண்டு தேய்ப்பது உங்களுக்கு முடி உடைதலுக்கு வழி வகுக்கும்.
Image Source: istock
இரவு நேரம் தூங்கும் போது பட்டு அல்லது சாடின் தலையணையை பயன்படுத்துங்கள். இது உராய்வைக் குறைத்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது.
Image Source: istock
மழைக்காலத்தில் கூந்தலை உலர வைக்க ஹேர் ட்ரையரை குறைவாக பயன்படுத்துங்கள். அதிகமாக பயன்படுத்துவது கூந்தல் சேதமடைய வாய்ப்புள்ளது. கூந்தலை இயற்கையான முறையில் உலர வைக்கலாம்.
Image Source: pexels-com
கூந்தலை மிருதுவாக வைக்கவும், உதிர்தலை தடுக்கவும் சீரம் அல்லது க்ரீம்களை பயன்படுத்துங்கள். இது வறட்சியை போக்கி கூந்தல் உதிர்தலை தடுக்கிறது.
Image Source: istock
கூந்தலில் பிளவுபட்ட நுனிகள் இருந்தால் 6-8 வாரங்களுக்கு ஒரு முறை வெட்டி விட வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.
Image Source: istock
நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் எடுப்பது மழைக்காலத்தில் கூட உங்கள் கூந்தல் பளபளப்பாக பொலிவாக இருக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!