Jun 21, 2024
கொய்யாப்பழம் சுவையான பழம் என்பதை தாண்டி மழைக்காலத்தில் இதனை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகளை பெறமுடியும். அது குறித்து இப்பதிவில் காணலாம்.
Image Source: pexels
ஆரஞ்சு பழத்தில் இருப்பதனை விட கொய்யாப்பழத்தில் 4 மடங்கு வைட்டமின் சி அதிகம். இதனால் இதனை சாப்பிடுவது மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினை உடலுக்கு அளித்து மழைக்கால தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது
Image Source: istock
பொதுவாகவே மழைக்காலத்தில் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். கொய்யாவில் நிறைந்துள்ள நார்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கவல்லது.
Image Source: istock
கொய்யாப்பழத்தின் இலைகளின் சாறு பல் வலி, ஈறு வீக்கம், வாய் புண் உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் பண்பு கொண்டதாகும்
Image Source: istock
பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் போது பலருக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மெக்னீசியம் நிறைந்த கொய்யா பழங்களை சாப்பிட்டால் நல்ல பலன்களை பெறலாம். உடல் தசைகள் மற்றும் நரம்புகளை தளர்த்தவும் இது உதவுகிறது.
Image Source: istock
இந்த இலைகளில் ஆக்சிஜனேட்டர்கள், அழற்சி எதிர்ப்பு சக்தி, பலவகையான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளது. இதனை சரியான முறையில் எடுத்து கொண்டால் பல்வேறு நன்மைகளை பெறலாம் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிறது.
Image Source: istock
மழைக்காலத்தில் புதிதாக வளர துவங்கும் கொய்யா இலைகள் 4-5 எடுத்து அதனை வாயில் போட்டு மென்று தின்று வெந்நீர் குடித்தால் வயிற்றுப்போக்கு, குமட்டல் குணமாகும். ஆனால் இதனை எடுத்துக்கொண்ட பிறகு 2-3முறை வயிற்றுப்போக்கு ஏற்படும் பின்னர் முழுமையாக குணமாகி விடும்.
Image Source: istock
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்தளவிலான கிளைசெமிக் குறியீடுகள் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைப்பதோடு, நீரிழிவு நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
Image Source: Samayam Tamil
கொய்யாவிலுள்ள வைட்டமின்-ஏ சத்துக்கள் கண் பார்வை குறைப்பாட்டினை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: pexels
Thanks For Reading!