[ad_1] மழைக்காலத்தில் சரும பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் இயற்கை பேஸ் பேக்!

Jul 3, 2024

மழைக்காலத்தில் சரும பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் இயற்கை பேஸ் பேக்!

Anoj

சரும பிரச்சனைகள்

மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக பல்வேறு தோல் பிரச்சனைகள் உண்டாகக்கூடும். அதனை சமாளிக்க உதவும் இயற்கை பேஸ் மாஸ்க பற்றி இங்கு பார்க்கலாம்

Image Source: pexels-com

ஓட்மீல் - தயிர்

ஓட்ஸ், முகத்தில் சுரக்கும் கூடுதல் எண்ணெயை உறிஞ்சுவது மட்டுமின்றி சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தக்கூடும். அதேபோல், தயிரின் நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கும் பண்புகள், சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கக்கூடும்

Image Source: istock

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு பவுலில் 3 டீஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 முட்டையை சேர்க்க வேண்டும். பிறகு, 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை பிரிட்ஜில் சில மணி நேரம் வைத்துவிட்டு, முகம் முழுவதும் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு வாஷ் செய்யவும்

Image Source: istock

கடலை மாவு - ரோஸ் வாட்டர்

கடலை மாவில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், முகப்பரு மற்றும் சரும எரிச்சலை குறைக்க உதவும். இதுதவிர, எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் ஆகியவை, துளை அடைப்பை நீக்கி ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும்

Image Source: istock

பயன்படுத்தும் முறை

கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்க்கவும். பிறகு சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும். அவற்றை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி, சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு வாஷ் செய்யவும்

Image Source: istock

தேன் - லாவெண்டர் ஆயில்

தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், முகப்பரு மற்றும் சரும வெடிப்பை சரிசெய்வதோடு சரும நிறத்தை மேம்படுத்தக்கூடும். மேலும், லாவெண்டர் ஆயில் சரும பிரச்சனைகளை போக்கி இயற்கை பொலிவை தரக்கூடும்

Image Source: istock

பயன்படுத்தும் முறை

ஒரு பவுலில், 2 டீஸ்பூன் தேன், 4 டீஸ்பூன் லாவெண்டர் ஆயில் சேர்க்கவும். பிறகு, 1 டீஸ்பூன் டீ ட்ரீ ஆயிலை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகம் முழுவதும் தடவி, 10 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்ய வேண்டும்

Image Source: istock

சந்தனம் - மஞ்சள்

சந்தனம் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதோடு சரும பிரச்சனைகளை ஆற்றக்கூடும். அதேநேரம், மஞ்சள் சரும பொலிவை அதிகரிக்க பயன்படுகிறது

Image Source: istock

பயன்படுத்தும் முறை

ஒரு பவுலில், 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் சேருங்கள். பிறகு, லேசாக ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்களுக்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்

Image Source: istock

Thanks For Reading!

Next: வெறும் படிகாரக் கற்களை பயன்படுத்தி சருமத்தை எப்படி அழகாக்கலாம்?

[ad_2]