[ad_1] மழைக்காலத்தில் 'சென்னை'யில் இருந்து செல்லக்கூடிய சூப்பரான ஸ்பாட்ஸ்

Jun 27, 2024

மழைக்காலத்தில் 'சென்னை'யில் இருந்து செல்லக்கூடிய சூப்பரான ஸ்பாட்ஸ்

Anoj

மழைக்கால சுற்றுலா

மழைக்காலத்தில் லாங் டிரைவ் திட்டமிடுவது சிறந்த முடிவாகும். இனிமையான காலநிலையில் இயற்கை அழகை ரசிப்பது சிறப்பான அனுபவத்தை தரக்கூடும். அந்த வகையில், சென்னையில் இருந்து சுற்றிப்பார்க்க திட்டமிட வேண்டிய இடங்களை இங்கு காணலாம்

Image Source: unsplash-com

மகாபலிபுரம்

நீங்கள் சென்னையில் இருந்து ஷார்ட் டிரைவ் எதிர்பார்த்தால், மகாபலிபுரம் செல்லலாம். இது சென்னையில் இருந்து 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்று கோயில்களை ஆராய்வதோடு கடற்கரையிலும் நேரத்தை செலவிடலாம்

Image Source: unsplash-com

பாண்டிச்சேரி

மழைக்காலத்தில் சென்னை வாசிகளின் ஃபேவரைட் ஸ்பாட்டாகும். சென்னையில் இருந்து 155 கி.மீ தொலைவில் பாண்டிச்சேரி உள்ளது. பிரெஞ்ச் கட்டிக்கடலை, மயக்கும் கடற்கரை மட்டுமின்றி பல சுற்றுலா தளங்கள் உள்ளன

Image Source: unsplash-com

புலிகாட் ஏரி

நகர இரைச்சலில் இருந்து தப்பிக்க விரும்பினால் புலிகாட் ஏரிக்கு ட்ரிப் செல்லலாம். அப்பகுதி சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் தான் அமைந்துள்ளது. பறவைகளின் சத்தத்தை கேட்டப்படியே தண்ணீரில் சாகச செயல்களிலும் ஈடுபடலாம்

Image Source: unsplash-com

ஏலகிரி மலை

ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் காணப்படும் ஏலகிரி மலை, மழைகாலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் மேகமூட்டங்கள், சுற்றுலா வாசிகளுக்கு சிறந்த அனுபவத்தை தரக்கூடும். சென்னையில் இருந்து சுமார் 230 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

Image Source: unsplash-com

நெல்லூர்

ஆந்திராவின் நெல்லூர், சென்னையின் சிறந்த வீக் எண்ட் ஸ்பாட் ஆகும். Nelapattu பறவைகள் சரணாலாயம், சோமசிலா அணை, உதயகிரி கோட்டை போன்ற சுற்றுலா தளங்கள் உள்ளன. மழைக்காலத்தில் வானிலை மிகவும் இனிமையாக இருக்கக்கூடும்

Image Source: instagram-com/freakouts_adventure

நாகலாபுரம் நீர்வீழ்ச்சி

இது சென்னையில் இருந்து 70 கி.மீ., தொலைவில் இருக்கும் மயக்கும் நீர்வீழ்ச்சியாகும். ட்ரெக்கிங் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாகும். மழைக்காலத்தில் தண்ணீர் வரத்தும் அதிகமாக இருக்கக்கூடும்

Image Source: instagram-com/saiguru_j

ஹார்ஸ்லி ஹில்ஸ்

இது ஆந்திராவில் இருக்கும் அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். சென்னையில் இருந்து சுமார் 280 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரமிப்பூட்டும் காட்சிகள், அடர்ந்த காடுகள் மற்றும் இனிமையான காலநிலையை சுற்றுலா வாசிகளுக்கு வழங்குகிறது

Image Source: instagram-com

தரங்கம்பாடி

சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டிரான்க்யூபார் எனும் தரங்கம்பாடி, டேனிஷ் கட்டிக்கடலை பிரதிபலிக்கும் அழகிய கடற்கரை நகரமாகும். டேனிஷ் கோட்டை, பழைய தேவாலயங்கள் மற்றும் கடற்கரையின் அழகையும் கண்டு ரசிக்கலாம்

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: விமான பயணத்தின் போது Check-In பையில் வைக்க கூடாத பொருட்கள்!

[ad_2]