Jul 24, 2024
மழைக்காலம் வந்துவிட்டாலே நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் ஒருபக்கம், மறுப்பக்கம் சருமம் சம்மந்தமான பாதிப்புகள் ஒரு பக்கம் ஏற்படுவது வழக்கம். அப்படி இந்த மழைக்காலத்தில் நமது தலைக்கு பயன்படுத்த கூடாத எண்ணெய் வகைகளை தான் இப்பதிவில் காணவுள்ளோம்.
Image Source: istock
நமது தலைமுடியை பராமரிக்க நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம், ஆயுர்வேத முறைகளில் பலதரப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஆனால் நமது தலைமுடி அழகினை பராமரிக்க ஒரு சில எண்ணெய்களை மழைக்காலத்தில் தலையில் தேய்ப்பதை தவிர்ப்பது நல்லது.
Image Source: istock
தடிமனான நிலைத்தன்மை கொண்டது இந்த ஆமணக்கு எண்ணெய். இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்தால் கழுவுவது சற்று கடினம். மழைக்காலத்தில் இதன் தடிமனான தன்மை முடியில் எண்ணெய் பசையை அதிகரிப்பதோடு, பொடுகு மற்றும் பூஞ்சை தொற்று அபாயங்களை அதிகரிக்கும்
Image Source: istock
ஆமணக்கு எண்ணெய் போல் ஆலிவ் எண்ணெய்யும் தடிமனான தன்மை கொண்டது தான். இதனை தலையில் ஈரமான சூழலில் தடவினால் தலைமுடி தட்டையாக காட்டக்கூடும். அதே போல் தேங்காய் எண்ணெய்யும் மழைக்காலத்தில் தலைமுடியை கொழுப்பாக மாற்றும், அழுக்குகளை ஈர்த்து, மயிர்கால்களை அடைத்து உச்சந்தலையில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Image Source: istock
ஆர்கான் எண்ணெய் கூந்தல் நன்மைகளுக்கு பெயர்பெற்றதாகும். ஆனால் இதனை மழைக்காலத்தில் பயன்படுத்தினால் கனமாகி முடியை க்ரீஸாக்கி, கம்மியாக இருப்பது போல் காண்பிக்கும். ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னர் பயன்படுத்துவது நல்லது.
Image Source: istock
பாதாம் எண்ணெய் மற்ற எண்ணெய்களோடு ஒப்பிடுகையில் இலகுவானதாக இருந்தாலும், மழைக்காலத்தில் தலையில் தடவினால் முடியில் எச்சத்தை விட்டுவிடும் என்று கூறுகிறார்கள். இதனால் உச்சந்தலையில் பிரச்சனைகள் ஏற்படும்.
Image Source: istock
பல்வேறு மருத்துவ நன்மைகள் நிறைந்த கடுகு எண்ணெய் கடுமையான வாசனை மற்றும் அதன் அடர்த்தியான தன்மைக்கு பெயர்போனது. இது மழைக்காலத்தில் முடி பராமரிப்பிற்கு ஏற்றதல்ல. ஏனெனில், முடியின் எடையை கூட்டி, கொழுப்பாக மாற்றும்.
Image Source: istock
எள் எண்ணெய்யானது ஆழமான கூந்தல் சீரமைப்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் இதனை மழைக்காலத்தில் பயன்படுத்தப்படும் பட்சத்தில் இதன் கடினமான தன்மை எண்ணெய் பசையை முடியில் அதிகரித்து தூசி மற்றும் மாசுக்களை ஈர்க்க நேரிடும் என்பதால் பயன்படுத்த வேண்டாம்.
Image Source: istock
இந்த வகை எண்ணெய் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது, பல்வேறு நன்மைகளை பயக்கக்கூடியது. ஆனால் மழைக்காலத்தில் இதன் எச்சம், ஈரப்பதத்துடன் இணைந்து முடியை க்ரீஸாக்கி விடும் என்பதால் பயன்படுத்துவதை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!