Aug 17, 2024
மழைக்காலம் வந்துவிட்டாலே நம் அனைவருக்கும் அந்த மழையை ரசித்து கொண்டு சூடான பொருளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே தோன்றும். பலரும், டீ, காபி, பஜ்ஜி, போண்டா போன்ற பொருட்களை சாப்பிடுவதை வழக்கமாகவும் வைத்திருப்பர்.
Image Source: istock
அப்படி மழைக்காலத்தில் சூடாக சாப்பிட ஏற்ற உணவு வகைகளுள் மிக முக்கியமானவைகளுள் ஒன்று தான் இந்த மக்காச்சோளம். பலரும் ரோட்டோரம் விற்கப்படும் சூடான அவித்த மக்காச்சோளம், நெருப்பில் வாட்டிய மக்காச்சோளம் ஆகியவற்றை வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள்.
Image Source: istock
குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடும் இவ்வகை சோளத்தில் ஏராளமான உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் தன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதனை மழைக்காலத்தில் வாங்கி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.
Image Source: istock
மழைக்காலத்தில் நாம் இந்த மக்காச்சோளத்தை சாப்பிடுவதால் நமது குடல் இயக்கங்கள் சீராக இயங்கும், செரிமானம் சார்ந்த கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையையும் இது தீர்க்கும்.
Image Source: istock
மக்காச்சோளத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடும் பட்சத்தில் இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் நமது உடலுக்கு முழுமையாக கிடைக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Image Source: istock
பொதுவாகவே மழைக்காலத்தில் நமது உடல் சோர்வாக இருக்கும். இந்நிலையில் உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய புரதம் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் இந்த மக்காச்சோளத்தில் இருப்பதால் இதனை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்து காணப்படலாம்.
Image Source: istock
மழைக்காலத்தில் சூடான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பலரும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதுவே மக்காச்சோளத்தை சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைப்பதோடு, உடல் எடையை நிர்வகிக்கவும் பயன்படுகிறது.
Image Source: istock
மழைக்காலத்தில் தொற்று நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படும். இந்நிலையில், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டசத்துக்கள் நிறைந்த இந்த மக்காச்சோளத்தை சாப்பிட்டால் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Image Source: istock
பருவநிலை மாற்றம் காரணமாக சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனை தவிர்க்க மற்றும் குணப்படுத்த இந்த மக்காச்சோளம் பெரிதும் உதவும். இதிலிருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சுருக்கங்களை நீக்கி, பொலிவுடன் வைத்திருக்கும்.
Image Source: pexels
Thanks For Reading!