Jun 17, 2024
பொதுவாக மழைக்காலத்தில் நீங்கள் வெளியே செல்லும் போது ஒரு வேளை நனைந்து விட்டால் கூந்தலை அப்படியே விடாமல் உலர வைக்க வேண்டும். முடியில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி உலர வைப்பது மிகவும் அவசியம்.
Image Source: istock
ஈரமான கூந்தலில் சீப்பைக் கொண்டு வாரக் கூடாது. ஏனெனில் ஈரமான தலையில் மயிர்க்கால்கள் பலவீனமடைந்து காணப்படும். எனவே அகலமான சீப்பை பயன்படுத்துங்கள். உலர வைத்த பிறகு கூந்தலை வாருங்கள்.
Image Source: istock
வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். மழையில் நனைந்தால் கூட ஷாம்பு போட்டு குளிப்பது அவசியம். பாக்டீரியா எதிர்ப்பு ஷாம்புகளை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
கூந்தலுக்கு கண்டிஷனரை பயன்படுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் மழைக்காலத்தில் கூந்தலில் இருக்கும் ஈரப்பதத்தை நிர்வகிக்க கண்டிஷனர் உதவுகிறது.
Image Source: istock
கூந்தலுக்கு பளபளப்பான லுக்கை தருவதில் சீரம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதன் மூலம் சூரிய ஒளியில் இருந்து உங்கள் கூந்தலை நீங்கள் பாதுகாக்க முடியும்.
Image Source: istock
வாழைப்பழம், தேன், நெல்லிக்காய், தயிர் போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தி ஹேர் மாஸ்க் செய்யலாம். இது மழைக்காலத்தில் உங்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
Image Source: istock
உச்சந்தலையில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது கூந்தலுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கிறது. முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவுகிறது.
Image Source: istock
மழைக்காலத்தில் உங்கள் சிகை அலங்காரங்களை உங்களுக்கு செளகரியமாக மாற்றிக் கொள்ளலாம். பராமரிக்க ஏதுவாக ஷார்ட் ஹேர் கட் செய்து கொள்ளலாம்.
Image Source: pexels-com
தலைமுடியை நன்றாக உலர்த்தவும், ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சவும் மைக்ரோஃபைபர் துண்டை பயன்படுத்துங்கள். இது கூந்தலில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி சீக்கிரமே கூந்தலை உலர்வாக வைக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!