[ad_1] மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன?

Aug 21, 2024

மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன?

mukesh M

எடையை குறைக்கும் ஊறுகாய்!

மாங்காய் ஊறுகாயின் அளவான நுகர்வு உடல் எடையை குறைக்க உதவும் என பலரும் நம்பும் நிலையில், இந்த நம்பிக்கைக்கு பின் உள்ள உண்மை என்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

நிபுணர்கள் கூறுவது என்ன?

மாங்காய் ஊறுகாயில் கொழுப்பை எரிக்கும் தாவர இரசாயனங்கள் (phytochemicals), கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் பல பொருட்கள் காணப்படுகின்றன. இவை, உடல் எடை குறைப்பு முயற்சியில் நல்ல பலன் காண உதவுகின்றன.

Image Source: pexels-com

எப்படி உதவுகிறது?

மாங்காய் ஊறுகாயில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, வயிற்றின் முழுமையை உறுதி செய்வதோடு - சீரான குடல் இயக்கத்தையும் உறுதி செய்கிறது. அந்த வகையில், ஆரோக்கிய உடல் எடை பராமரிப்பில் உதவுகிறது.

Image Source: istock

சீரான வளர்சிதை மாற்றம்!

மாங்காய் ஊறுகாய் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் (மஞ்சள், கடுக, வெந்தயம் போன்ற) மசாலா பொருட்கள், வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் சீரான வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்கின்றன. ஆரோக்கிய உடல் எடை பராமரிப்புக்கு சீரான வளர்சிதை மாற்றம் அவசியம் ஆகும்!

Image Source: istock

கொழுப்பை எரிக்கும்!

மாங்காய் ஊறுகாயில் காணப்படும் phytochemicals கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. அதேநேரம் இதில் காணப்படும் வைட்டமின் ஏ, சி, ஈ, கால்சியம் போன்றவை உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளித்து, ஆரோக்கிய வாழ்வுக்கு உதவி செய்கிறது.

Image Source: istock

உடல் திசுக்களின் பாதுகாப்பு!

மாங்காய் ஊறுகாயில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ள்; ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கல்களில் இருந்து உடலை (உடல் திசுக்களை) பாதுகாக்க உதவுகிறது.

Image Source: istock

ஆபத்துகளும் உண்டு!

மாங்காய் ஊறுகாயின் நுகர்வு ஆரோக்கிய உடல் எடை பராமரிப்பில் உதவும் நிலையிலும், இதன் அதிகப்படியான நுகர்வு ஆனது இரத்த அழுத்தம், நீர் தக்கவைப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது!

Image Source: istock

காரணம் என்ன?

மாங்காய் ஊறுகாயில் காணப்படும் அளவுக்கு எண்ணெய், சோடியம் உள்ளடக்கம் ஆனது குறிப்பிட்ட இந்த ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!

Image Source: istock

அளவாக சாப்பிடுங்கள்!

மாங்காய் ஊறுகாயின் அளவுக்கு மிகுதியான நுகர்வு, அதில் காணப்படும் எண்ணெய் பொருட்கள் காரணமாக உடலில் கொழுப்பின் அளவை அதிகரித்து, இரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்ற ஆபத்துக்களையும் ஏற்படுத்தலாம்!

Image Source: istock

Thanks For Reading!

Next: கழிவறையில் நீங்கள் செய்யும் அந்த தவறு; உங்களை நோயாளியாக மாற்றும்!

[ad_2]