[ad_1] மாணவர்களே! கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற இப்படி பண்ணுங்க!

May 18, 2024

மாணவர்களே! கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற இப்படி பண்ணுங்க!

Anoj

கோடை கால டிப்ஸ்

கோடை விடுமுறை நாட்களை படம் பார்ப்பது, கணினியில் கேம்ஸ் விளையாடுவது என வீணாக்காமல், அதை எப்படி பயனுள்ளதாக மாணவர்கள் செலவிடலாம் என்பதை இந்தப் பதிவில் விரிவாக காணலாம்

Image Source: pexels-com

அறிவு சார்ந்த விளையாட்டுகள்

ஆன்லைனில் பல அறிவு சார்ந்த விளையாட்டுகள் வந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் குறுக்கெழுத்து, சுடோகு என நம் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் போட்டிகளும் உள்ளது. மூளையை சுறுசுறுப்பாக்கும் செயல்களில் ஈடுபாட்டை அதிகரித்து நேரத்தை பயனுள்ளதாக மாற்றும்.

Image Source: pexels-com

கால அட்டவணை தேவை

விடுமுறை காலம் நம்மிடம் நிறைய நேரம் இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அதனால் புதிதாக கற்றல், பொழுதுபோக்குகள், நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிடுதல், தூங்குதல் போன்ற அனைத்திற்கும் தேவையான நேரத்தை ஒதுக்கி அதற்கான அட்டவணையை சரியாக பின்பற்றவும்.

Image Source: pexels-com

புத்தக பயன்பாடு

கோடைகால விடுமுறை பாடப்புத்தகங்களை படிப்பதாக இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஆன்லைன் டூடோரியல், நூல்கள், நாவல்கள், புதிய மொழிகள் ஆகியவற்றை கற்பதால் அவை உங்களுக்கு எதிர்காலத்தில் உதவும்.

Image Source: pexels-com

திட்டமிடவும்

நீங்கள் ஊரை சுற்றி வலம் வர நினைக்கிறீர்கள் என்றால் அதில் புகைப்படம், வீடியோ, சக மனிதர்களின் அனுபவங்கள் உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தும் வித்தியாசமான திட்டங்களை உருவாக்கினால் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும்.

Image Source: pexels-com

தன்னார்வலர்களாக பணியாற்றலாம்

கோவில், நீர்நிலைகள் போன்ற இடங்களை சுத்தம் செய்வது, சமூகத்திற்கு தேவைப்படும் உதவிகள் செய்ய முன்வருவது, கோடை கால பயிற்சி வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது என தன்னார்வலர்களாக செயல்படலாம். இது பல புதிய கற்றலை உங்களுக்குள் புகுத்தும்.

Image Source: pexels-com

ஆடியோ மூலம் கற்றல்

தினசரி நேரத்தில் ஏதேனும் பாட்டு அல்லது வீடியோக்கள் பார்த்து பொழுதை கழிப்பவர்களாக இருந்தால் சற்று மாற்றி யோசிக்கலாம். அதற்கு பதிலாக கல்வி பாட்காஸ்ட், கிளாஸிக் இலக்கியங்கள், வரலாற்று நிகழ்வுகளை ஆடியோ வடிவில் கேட்பது நினைவில் நீங்கா இடம் பெற்று அறிவை வளர்க்கும்.

Image Source: pexels-com

இலக்குகள் அமையுங்கள்

தினமும் என்பதை தாண்டி வாரத்திற்கான சிறிய இலக்குகள் அமைத்து செயல்படவும். இது உங்களுக்குள் நேர்மறையான எண்ணங்களை உண்டாக்கி ஊக்கப்படுத்தும். நண்பர்கள் கூடுவது தொடங்கி சிறிய பயணம், படம் பார்ப்பது என எதுவாக வேண்டுமானாலும் இலக்குகள் இருக்கலாம்.

Image Source: pexels-com

மதிப்பிடவும்

கோடை காலம் முழுவதும் நீங்கள் என்ன செய்தீர்கள், எது முயற்சி செய்து முடியாமல் போனது என அனைத்தையும் ஆவணப்படுத்த நினையுங்கள். இந்த முறை எப்போதும் உங்கள் வாழ்வில் திட்டமிடலுக்கு பிறகான மாற்றத்தை உண்டாக்கும்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: மாணவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள கூடாத அந்த 9 விஷயங்கள்

[ad_2]