Jul 23, 2024
நம் அனைவருக்குமே ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும். நாம் சரியான இலக்கணத்தோடு பேசுவோமா என்ற கவலையில் ஆங்கிலம் பேச தயங்குவோம். பின்வரும் டிப்ஸ்களை பின்பற்றி சரியாக ஆங்கிலம் பேசி அசத்துங்கள்.
Image Source: pexels-com
பொருட்களின் பெயர்கள், உச்சரிக்கப்படும் முறை, கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்துக்கான இணைச்சொற்கள் எந்த இடத்தில் நாம் தடுமாடுகிறோம் என்பதை அடையாளம் காணுங்கள். இது தவறுகளை எளிதாக சரிசெய்ய உதவும்
Image Source: pexels-com
ஆடியோ உரையாடல்கள், நேர்காணல்கள், செய்தி வாசிப்பு போன்றவற்றை கூர்ந்து கவனிக்கவும். அவர்கள் எப்படி பேசுகிறார்கள், எந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்து பேசி பார்க்கலாம்.
Image Source: pexels-com
பாடப்புத்தகம், செய்தி கட்டுரைகள் என எதுவாக இருந்தாலும் சத்தமாக வாசித்து பழகுவதை உருவாக்கி கொள்ளுங்கள். இது சரியான இலக்கணம் மற்றும் உச்சரிப்பை நீங்கள் பெற உதவும்.
Image Source: pexels-com
விரைவாக ஆங்கிலத்தில் பேசுவது என்பது பழக பழக தான் வரும். எனவே ஆரம்பத்திலேயே வேகமாக பேசாமல் நீங்கள் சொல்ல வரும் கருத்துகளை உள்வாங்கி சரியான இலக்கணத்தோடு பேசுவதை உறுதி செய்யுங்கள்.
Image Source: istock
இலக்கணம் தொடர்பான சந்தேகங்கள், அதனை தீர்க்கக்கூடிய பயிற்சிகள் என ஆன்லைனில் அனைத்தும் கிடைக்கிறது. இதன்மூலம் நாம் செய்யும் தவறுகளை எளிதாக அடையாளம் காண முடியும்.
Image Source: pexels-com
சிக்கலான வார்த்தைகள்,வாக்கியங்கள் இலக்கண பிழைகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. எனவே எளிய மற்றும் புரியக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்தலாம்.
Image Source: pexels-com
நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை ஆடியோ அல்லது வீடியோவாக பதிவு செய்து சுயமதிப்பீடு செய்து பழகலாம். இதனை மீண்டும் மீண்டும் கேட்கும்போது இலக்கண பிழைகளை சரிசெய்வதோடு உச்சரிப்பிலும் மாற்றம் காணலாம்.
Image Source: pexels-com
ஆங்கிலத்தில் எளிதாக பேச நண்பர்கள் அல்லது குழுவுடன் இணைந்து உரையாடலாம். தடுமாறும் இடங்களில் சக நபர்கள் நிரப்பும் வார்த்தைகளை கொண்டு இணைக்க முயற்சிக்கலாம்.
Image Source: pexels-com
Thanks For Reading!