May 15, 2024
மாணவர்கள் பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளத்தில் செலவிடும் நிலையில், அதில் செய்யும் சில விஷயங்கள் மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதை அறிவதே இல்லை. அவர்கள் சமூக வலைத்தளத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை காணலாம்.
Image Source: pexels-com
எக்காரணம் கொண்டும் உங்கள் முகவரி, போன் நம்பர், பிறந்த தேதி, நீங்கள் அடிக்கடி செல்லும் இடம், உங்களுடைய தினசரி நிகழ்வுகளை பகிர வேண்டாம். இது மோசடி நபர்கள் சுயலாபத்துக்கு பயன்படுத்த வழிவகை செய்யும்.
Image Source: pexels-com
லைவ் ஆப்ஷன் சமூக வலைத்தள செயலிகளில் வந்து விட்டது. இதன்மூலம் நீங்கள் இருக்கும் இடம், எங்கு செல்ல போகிறீர்கள் என்ற தகவலை எல்லாம் பகிர வேண்டாம். ஒருவேளை நீங்கள் தனியாக இருந்தால் நிலைமையை மோசமாக்கும்.
Image Source: unsplash-com
எக்காரணம் கொண்டும் ஒருவருடனான தனிப்பட்ட உரையாடல்களை பொதுவெளியில் பகிர வேண்டாம். தற்போது ஸ்கிரீன் ஷாட், ஸ்கிரீன் ரெக்கார்டிங் போன்றவை அதிகளவில் பகிரப்படுகிறது. இதனை உடனடியாக நிறுத்துங்கள்.
Image Source: istock
சமூக வலைத்தளங்களில் எதை பகிர வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை. பள்ளி, கல்லூரிகளில் நிகழ்வுகளை பற்றிய வேடிக்கையான பதிவுகள் உங்களுக்கே சிக்கலை உண்டாக்கும்.
Image Source: pexels-com
சிலர் வேடிக்கை என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள். இதுதொடர்பான புகைப்படம், வீடியோக்கள் உங்களை பிரச்சினையில் மாட்ட வழிவகை செய்யும்.
Image Source: istock
உங்கள் செயல்கள் பாராட்டைப் பெற வேண்டும் என அதனை சமூக வலைத்தளங்களில் மிகைப்படுத்தி பதிவிட வேண்டாம். இது சக பயனாளர்களுக்கு உங்கள் மீதான எண்ணத்தை மாற்றி விடும்.
Image Source: pexels-com
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களையும் புகைப்படம் , வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட நினைக்கலாம். இது மோசடி, திருட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு உதவலாம்.
Image Source: unsplash-com
உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மற்றவர்களை பற்றி எதிர்மறையான கருத்துகளை பகிராதீர்கள். அதன் விளைவு உங்கள் எதிரில் இருப்பவர்களை எங்கேயோ கொண்டு சென்று நிறுத்தி விடும்.
Image Source: unsplash-com
Thanks For Reading!