[ad_1] மாணவர் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன?

Jun 15, 2024

மாணவர் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன?

Anoj

I Am Kalam (2010)

இந்தியில் வெளியான இப்படம் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் போல ஆக வேண்டும் என நினைக்கும் ஒரு சிறுவனைப் பற்றிய கதையாகும். பல்வேறு திரைப்பட விழாக்களிலும், 70வது சுதந்திர தின விழாவில் இப்படம் கௌரவிக்கப்பட்டது.

Image Source: twitter-com

Nil Battey Sannata (2015)

இந்தியில் வெளியான அஸ்வினி ஐயர் திவாரி இயக்கிய இப்படத்தில் ஸ்வாரா பாஸ்கர், ரியா சுக்லா என பலரும் நடித்தனர். கணித பாடத்தில் திணறும் மகளுக்கு ஆதரவாக அம்மா எடுக்கும் முடிவுகள் தான் கதை. தமிழில் அமலா பால் நடிக்க அம்மா கணக்கு என ரீமேக் செய்யப்பட்டது.

Image Source: instagram-com

chhichhore (2019)

இந்தியில் நிவேஷ் திவாரி இயக்கிய இப்படம் ஐஐடி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவனுக்கும், அவனுடைய தந்தைக்கும் இடைப்பட்ட நிலையை சொல்லியது. தன்னுடைய கல்லூரி கால அனுபவங்களை காட்சிகளாக கொண்டு வந்தார் நிவேஷ் திவாரி.

Image Source: instagram-com

Taare Zameen Par (2007)

இந்தியில் அமீர் கான் இயக்கி, தயாரித்து நடித்த 'தாரே ஜமீன் பார்' படம் டிஸ்லெக்ஸியா பாதிப்பால் அவதிப்படும் சிறுவனை மையப்படுத்திய கதையாகும். கற்றல் குறைபாடு கொண்டு குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆதரவளிப்பதை வலியுறுத்தியது.

Image Source: instagram-com

3 Idiots (2009)

2009ல் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய 3 Idiots படம் தமிழில் விஜய் நடிப்பில் 'நண்பன்' ஆக ரீமேக் செய்யப்பட்டது. இந்திய கல்வி முறைகளில் உள்ள குறைபாடுகளை மையமாக கொண்டு ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தை இப்படம் வெளிப்படுத்தியது. தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Image Source: instagram-com

Half CA (2023)

Half CA கடந்த ஆண்டு இந்தியில் வெளியான வெப் தொடராகும். 5 எபிசோட்களை கொண்ட இந்த தொடரானது சிஏ படிக்கும் இரு மாணவர்கள் தங்களுடைய பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போராட்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

Image Source: instagram-com

kota factory (2019)

இந்தியில் வெளியான kota factory வெப் தொடர் இரண்டு சீசன்களாக 10 எபிசோட்களை கொண்டது. ஐஐடி தேர்வுக்கு தயாராகு மாணவர்களின் பயணத்தில் ஏற்படும் காதல், மன அழுத்தம், கல்வி முறை என அனைத்தையும் இப்படம் சித்தரித்தது.

Image Source: instagram-com

Aspirants (2021)

இந்தியில் 2 சீசன்களாக வெளியான Aspirants வெப் தொடர் 10 எபிசோட்களை கொண்டுள்ளது. சிவில் சர்வீஸஸ் தேர்வுகு தயாராகும் 3 நண்பர்களின் வாழ்க்கையையும், இலக்குக்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் போராட்டத்தையும் இப்படம் வெளிப்படுத்தியது.

Image Source: instagram-com

12th Fail (2023)

இந்தியில் விது வினோத் சோப்ரா இயக்கிய இப்படம் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவின் வாழ்க்கை வரலாறு ஆகும். கல்வி பற்றிய புரிதலே இல்லாத கிராமத்தில் இருந்து மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்ற மனோஜ் குமார் ஷர்மாவின் வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணாக இருந்தது.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: பாண்டா பற்றி பலரும் அறிந்திராத வியக்க வைக்கும் உண்மைகள்!

[ad_2]