Jul 15, 2024
BY: Anoj, Samayam Tamilசிக்கனில் பல விதமான ரெசிபிக்களை முயற்சிக்கும் நிலையில், இந்தப் பதிவில் சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் ரெசிபியில் ஒன்றான சிறுவாணி சிக்கன் செய்முறையை பற்றி பார்க்கலாம்
Image Source: instagram-com/madhampatty_rangaraj
துவரம் பருப்பு - கால் கப்; தண்ணீர் - 2 கப்; மஞ்சள் - அரை டீஸ்பூன்; சின்ன வெங்காயம் - அரை கப்; பூண்டு - 10 முதல் 12 பற்கள்; வர மிளகாய் - 3; எலும்பு இல்லாத சிக்கன் - கால் கிலோ; உப்பு - சுவைக்கேற்ப; தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன்; கறிவேப்பிலை - சிறிதளவு
Image Source: istock
முதலில் குக்கரில் கால் கப் துவரம் பருப்பு, 2 கப் தண்ணீர், கால் டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து வேகவைக்க வேண்டும். 4 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
Image Source: istock
துவரம் பருப்பு தண்ணீரை தனி பவுலுக்கு மாற்றிவிட்டு, பருப்பை நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்
Image Source: istock
பின் பிளெண்டர் ஒன்றில், கால் கப் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கெட்டியான பேஸ்ட் தயாரிக்கவும்
Image Source: istock
இந்த பேஸ்டை பவுலில் உள்ள சிக்கனுடன் சேர்க்க வேண்டும். அத்துடன் கொஞ்சமாக உப்பு போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்
Image Source: istock
இப்போது கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, மீதமுள்ள நறுக்கிய சின்ன வெங்காயம், கால் டீஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் வதக்க வேண்டும்
Image Source: pexels-com
அடுத்து, சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் வேகவிட வேண்டும். ஏற்கனவே எடுத்துவைத்துள்ள பருப்பு தண்ணீரை சேர்த்து 2 நிமிடங்களாவது அடுப்பில் வைக்கவும்
Image Source: istock
இறுதியாக, வேகவைத்த பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறினால் சிறுவாணி சிக்கன் ரெடி. இதை சப்பாத்திக்கு அளித்தால் சூப்பராக இருக்கும்
Image Source: istock
Thanks For Reading!