Jun 8, 2024
By: mukesh Mமாதவிடாய் காலத்தில் பெண்கள் குளிப்பது தொடர்பான பல்வேறு மூட நம்பிக்கைகள் நம்பப்பட்டு வரும் நிலையில், மாதவிடாயின் போது பெண்கள் குளிப்பது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி மாதவிடாயின் போது பெண்கள் குளிப்பது ஒரு ஆரோக்கியமான முடிவு ஆகும். இருப்பினும், பெண்கள் இதன் போது தண்ணீரின் சரியான வெப்பநியைலை உறுதி செய்வது அவசியம்!
Image Source: istock
மாதவிடாயின் போது பெண்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது, அழற்சி மற்றும் தடிப்புகளுக்கு வழிவகுக்கும். அதேநேரம் வெந்நீர் ஆனது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மாதவிடாய் இரத்தப்போக்கினை அதிகரிக்கும்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் இதமான வெப்பநிலையில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி குளிப்பது நல்லது. மாதவிடாயின் போது உண்டாகும் தசை பிடிப்புகளை இந்த வெதுவெதுப்பான நீர் போக்க உதவும்.
Image Source: istock
மாதவிடாயின் போது குளியலறையில் குளிப்பதை காட்டிலும் நீச்சல் குளத்தில் குளிப்பது நல்லது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இதன் போது பெண்கள் tampon, menstrual போன்ற பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்துவது அவசியம்.
Image Source: istock
மாதவிடாய் காலத்தில் குளிக்கும் போது பெண்கள், அதிகப்படியான இரத்தப்போக்கை சந்திக்க கூடும். இந்த இரத்தப்போக்கை சமாளிக்க இந்த பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்துவது நல்லது!
Image Source: istock
மாதவிடாயின் போது தலைக்கு குளிப்பது கூந்தல் உதிர்வுக்கு வழிவகும் என பலரும் நம்புகின்றனர். ஆனால் உண்மையில் இது முற்றிலும் தவறான ஒரு நம்பிக்கை எனவும்; மாதவிடாயின் போது தலைக்கு குளிப்பதில் தவறு இல்லை எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
குளியல் எனப்படுவது சுகாதாரத்திற்கு உதவும் ஒரு விஷயம் ஆகும். மாதவிடாயின் போது மிக மிக அவசியமாக இருக்கும் சுகாதாரத்தை தவிர்க்கும் வகையில் குளியலை தவிர்ப்பது ஈஸ்ட் தொற்று, UTI தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Image Source: istock
மேலும், மதவிடாயின் போது பெண்கள் குளிப்பது மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தலைவலி, முதுகு வலி, தசை பிடிப்பு உள்ளிட்ட உடல் அசௌகரிய பிரச்சனைகளையும் தடுக்கும்.
Image Source: pexels-com
Thanks For Reading!