Jun 21, 2024
By: mukesh Mமாதவிடாய் காலகட்டத்தில் பெண்களுக்கு ஹார்மோன் ஏற்ற தாழ்வுகள் காரணமாக மனநிலை மாற்றங்கள், உடல் பாதிப்புகள் போன்றவை ஏற்படலாம். இச்சூழலில் அவர்களுக்கு ஒரு சில யோகாசனங்கள் உதவக்கூடும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: pexels-com
மாதவிடாய் காலத்தில் யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம் தசைப்பிடிப்புகள், வீக்கம், மனநிலை மாற்றம் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெற முடியும். எனினும், சரியான யோகா பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்வது அவசியம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
மாதவிடாய் காலத்தில் யோகா பயிற்சி செய்வதால் தசை பிடிப்புகள், முதுகு வலி அசௌகரியம் போன்றவை சரி செய்யப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்களுக்கு நிவாரணம் அளிக்க யோகா பயிற்சிகள் உதவுகிறது.
Image Source: istock
இடுப்பு அசைவுகளை கொடுக்கக்கூடிய யோகா பயிற்சிகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் தசைகளில் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்தி திசுக்களுக்கு ஊட்டமளிக்கிறது.
Image Source: istock
மாதவிடாய் காலத்தில் பதற்றம், கவலை போன்ற பிரச்சனைகளை சரி செய்ய யோகா பயிற்சிகள் உதவுகின்றன. சில யோகா பயிற்சிகள் மனதுக்கு அமைதியை ஏற்படுத்தி ஒருநிலைப்படுத்த உதவுகிறது.
Image Source: istock
மாதவிடாய் காலத்தில் சூரிய நமஸ்காரம், அடிவயிற்றில் அதிக அழுத்தம் கொடுக்கக்கூடிய பயிற்சிகள், வெப்பத்தை தூண்டக்கூடிய சுவாசப் பயிற்சிகள் போன்றவை செய்வதை தவிர்க்கவும்.
Image Source: istock
பிராணயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகளை மாதவிடாய் காலத்தில் செய்யலாம். இது மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.
Image Source: istock
மாதவிடாய் காலத்தில் பெண்கள் மென்மையான கை கால்களை அசைக்க கூடிய எளிதான யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இரத்தப்போக்கு இருப்பதால் வேகமாக செய்யக்கூடிய பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.
Image Source: istock
உடலை வளைந்து கொடுக்கக்கூடிய சில பயிற்சிகளை மெதுவாக செய்யலாம். முன்னோக்கி உட்கார்ந்து வளைந்து கொடுக்கக்கூடிய பயிற்சிகள் உடலுக்கு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
Image Source: istock
Thanks For Reading!