Aug 6, 2024
மாதவிடாய் காலங்களில் பெண்கள் மிகவும் சோர்வாக உணர்வார்கள். இந்த காலங்களில் அவர்களுக்கு பசிக்கவே பசிக்காது. இதனால் பெரும்பாலும் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் சாப்பிடாமல் இருப்பதால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படலாம்.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் நீங்கள் ஏற்கனவே சோர்வாக இருப்பீர்கள். இதில் சாப்பிடாமல் இருந்தால் கூடுதல் சோர்வாக உணர்வீர்கள். எனவே முடிந்த வரை மிதமாக சாப்பிடுவது அவசியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் சாப்பிடாமல் இருப்பதால் இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை நீங்கள் இழக்க நேரிடலாம். இதனால் இரத்த சோகை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
Image Source: pexels-com
சாப்பிடாமல் இருப்பதால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம். ஹார்மோன்களை சமநிலையில் வைக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் சாப்பிடாமல் இருப்பதால் மாதவிடாய் வலி மேலும் மோசமாக வாய்ப்பு உள்ளது. இது அசெளகரியத்தை ஏற்படுத்தும். நிறைய தண்ணீர் குடியுங்கள்.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் சாப்பிடாமல் இருப்பதால் இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். இதனால் சோர்ந்து போவீர்கள். எனவே சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் சாப்பிடாமல் இருப்பதால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மலச்சிக்கல், அழற்சி ஏற்படலாம். எனவே நார்ச்சத்துக்கள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
எனவே மாதவிடாய் காலங்களில் பெண்கள் விரதத்தை கடைபிடிக்க கூடாது. சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் உடல் பிரச்சனைகள் ஏராளமானதாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!