Jul 16, 2024
மாதவிடாயின் போது சருமத்தை பராமரிப்பது என்பது எப்போதும் சவாலான விஷயமாகும். ஹார்மோன் மாற்றங்களால் முகப்பருக்கள், சருமத்தில் வறட்சி மற்றும் எண்ணெய் பசை தன்மை போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நீங்கள் எந்த மாதிரியான சரும டிப்ஸை ஃபாலோ செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்ற லேசான காமெடோஜெனிக் அல்லாத க்ளீன்சரை பயன்படுத்துங்கள். இதுவே உங்களுக்கு சென்ஸ்டிவ் சருமம் என்றால் வாசனை இல்லாத மற்றும் ஹைபோ அலர்ஜெனிக் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் குறைந்தது 8 கப் தண்ணீர் குடிப்பது சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: pexels-com
உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள். வெளியே செல்வதற்கு 15-30 நிமிடங்களுக்கு முன்பு சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
சென்ஸ்டிவ் சருமம் உங்களை எரிச்சலடையச் செய்யும். எனவே கடுமையாக எக்ஸ்ஃபோலியண்ட் செய்வதை தவிருங்கள். ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் அல்லது பீட்டா ஹைட்ராக்ஸி அமிலங்களை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
முகத்தில் வறட்சி ஏற்படாமல் முகப்பருவை போக்கிட சீரம், டோனர் போன்ற ஸ்பாட் சிகிச்சைகளை செய்யலாம். பென்சாயில் பெராக்சைடு இல்லாத சாலிசிலிக் அமில தயாரிப்புகளின் பயன்பாட்டை மாதவிடாய் காலங்களில் கட்டாயம் குறைக்க வேண்டும்
Image Source: istock
பாக்டீரியா மற்றும் எண்ணெய்களை முகத்தில் வைப்பதை தவிருங்கள். அடிக்கடி கைகளைக் கொண்டு முகத்தை தொடுவதை தவிருங்கள். சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை தொடுவதை தவிருங்கள்.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தடுக்க தவறாமல் தினசரி சரும பராமரிப்பு வழக்கங்களை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் முகப்பருக்கள் மற்றும் சரும வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் சரும பராமரிப்பு பிரச்சினைகள் அதிகமாக இருந்தால் உடனே சரும மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!