May 5, 2024
மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிறுத்த காலகட்டத்தில் பெண்கள் ஹாட் ஃப்ளாஷ், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலையில், இவற்றை சமாளிக்க. உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டிய சப்ளிமெண்ட்ஸ் பற்றி இங்கு காணலாம்!
Image Source: istock
மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் ஹாட் ஃப்ளாஷ் பிரச்சனைகளை சரி செய்ய இந்த பிளாக் கோஹோஷ் (Black cohosh)சப்ளிமெண்ட் உதவுகிறது. இருப்பினும், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது!
Image Source: istock
ஆளி விதை மற்றும் ஆளி விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மெனோபாஸ் காலகட்டத்தில் பல பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி அதிகமாக வியர்தல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுவதாக கூறப்படுகிறது.
Image Source: istock
மெனோபாஸ் காலகட்டத்தில் எலும்பு தேய்மானம் பெண்களை அதிகளவில் பாதிக்கும். எனவே கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை (பால் பொருட்களை) எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
Image Source: pexels-com
வைட்டமின் டி சத்து நமது உடலில் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. வைட்டமின் டி நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ளுதல் நல்லது. வயதானவர்களுக்கு மருத்துவ ஆலோசனையுடன் வைட்டமின் டி நிறைந்த சப்ளிமெண்ட்களை கொடுக்கலாம்.
Image Source: istock
சோயாவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹாட் ஃப்ளாஷ் பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உணவுகளில் சோயா சேர்த்துக் கொள்வதுடன் மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமெண்ட்ஸ்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
Image Source: istock
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரி செய்யவும், தூக்க பிரச்சனைகளை சரி செய்யவும் இந்த ஜின்ஸெங் (Ginseng) மாத்திரைகள் உதவுவதாக கூறப்படுகிறது. சீன பூண்டுகளில் இந்த மருத்துவ குணம் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Image Source: istock
மாதவிடாய் கால இறுதி கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க சீன மருத்துவத்தில் இந்த டோங் குவாய் (Dong Quai) பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ ஆய்வுகள் எதுவும் இல்லை. இது புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் மருத்துவ ஆலோசனையோடு எடுத்துக் கொள்ளவும்.
Image Source: istock
குறிப்பிட்ட இந்த மருந்துகள் அனைத்தும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், எந்த ஒரு சப்ளிமெண்ட்டை எடுத்துக் கொள்வதற்கு முன்னரும் உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது அவசியம்.
Image Source: istock
Thanks For Reading!