[ad_1] 'மாதவிடாய் ரத்தம்' கருப்பாக இருப்பதற்கான காரணங்கள்

'மாதவிடாய் ரத்தம்' கருப்பாக இருப்பதற்கான காரணங்கள்

Jul 29, 2024

By: Anoj

மாதவிடாய் ரத்தப்போக்கு

மாதவிடாய் ரத்தப்போக்கில் ஏற்படும் நிற மாற்றம் சாதாரணமானது என்றாலும், சில நேரங்களில் உடல்நிலை குறைபாட்டை குறிக்கலாம். ரத்தம் கருப்பு அல்லது பிரவுன் நிறத்தில் டார்க் ஆக வருவதற்கு என்ன காரணங்கள் என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: istock

மாதவிடாய் ஆரம்பம் (அ) கடைசி

மாதவிடாய் ஆரம்ப கட்டம் மற்றும் இறுதி நாளில், ரத்தப்போக்கு குறைவாக இருக்கக்கூடும். அச்சமயத்தில் உடலில் இருந்து வெளியேற ரத்தம் நீண்ட நேரம் எடுக்கையில், ஆக்ஸிஜன் வெளிப்பாட்டால் அடர் டார்க் நிறத்திற்கு மாறக்கூடும். இது கருப்பு நிறத்தில் ரத்தம் வர முக்கிய காரணமாகும்

Image Source: istock

பிறப்புறுப்பில் ஏதேனும் பொருட்கள்.,

கருப்பு நிற ரத்தமானது, பிறப்புறுப்பில் tampon, காண்டம் போன்ற ஏதேனும் பொருட்கள் சிக்கிக்கொண்டிருப்பதை குறிக்கலாம். கருப்பு நிற ரத்ததுடன் துர்நாற்றம், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

Image Source: istock

தேங்கிய ரத்தம்

மாதவிடாய் ரத்தமானது, கருப்பை அல்லது பிறப்புறுப்பை விட்டு வெளியேறுவது தடைப்படும் போது, hematocolpos நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, அந்த ரத்தம் காலப்போக்கில் கருப்பு நிறத்திற்கு மாறக்கூடும்

Image Source: istock

பிரசவத்துக்கு பிறகான ரத்தப்போக்கு

குழந்தை பிறந்த நான்கு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு ஏற்படும் ரத்தப்போக்கு Lochia என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் அதிகமாக இருந்த ரத்தப்போக்கு, 4ம் நாளுக்கு பிறகு குறையக்கூடும். ரத்தம் குறையும் போது அதன் நிறமும் சிவப்பில் இருந்து டார்க் நிறத்திற்கு மாறும்

Image Source: pexels-com

கருச்சிதைவு காரணம்

கருப்பு நிற ரத்தம், கருச்சிதைவின் அறிகுறியாகவும் இருக்கலாம். பெரும்பாலான கரு 10 வாரத்தை எட்டும் முன்பே கருச்சிதவை சந்திக்கிறது. மருத்துவரை ஆலோசிக்காமல் கருச்சிதைவு நடந்திருப்பதை உங்களால் வேறு அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கவே முடியாது

Image Source: istock

கர்ப்பகால ரத்தப்போக்கு

கர்ப்பம் தரித்த ஆரம்ப நாட்களில் ரத்தப்போக்கு வருவது சகஜமாகும். கருவுற்ற சுமார் 10 முதல் 14 நாட்களில், முட்டையானது கருப்பையில் இணையக்கூடும். அச்சமயத்தில் பிறப்புறுப்பில் இருந்து ரத்த வெளியேற நேரம் எடுக்கும் என்பதால், கருப்பு நிறத்தில் காட்சியளிக்கலாம்

Image Source: istock

பாலியல் நோய் தொற்று

chlamydia, gonorrhea போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளும், ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும். அசசமயத்தில் தேங்கிய ரத்தம் வெளியேறினால், கருப்பு நிறத்தில் வரக்கூடும். கருப்பு நிற ரத்ததுடன் வலி, அரிப்பு போன்ற நோய் தொற்று அறிகுறிகளையும் பார்க்க முடியும்

Image Source: istock

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

சில அரிய நிகழ்வுகளில், கருப்பு நிற ரத்தம் வெளியேற்றம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இவை பெரும்பாலும் உடலுறவுக்கு பிறகு அல்லது மாதவிடாய் சுழற்சிக்கு இடையே ஏற்படக்கூடும்

Image Source: istock

Thanks For Reading!

Next: பூனைக்கு பால் கொடுப்பது சரியா? தவறா? பூனை வளர்ப்பில் பலரும் செய்யும் தவறுகள்!

[ad_2]