Aug 1, 2024
ஆரோக்கியமாக இருக்க காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறுவது ஓர் பொதுவான கருத்து. உண்மையில் அனைத்து காய்கறிகளும், பழங்களும் அனைவருக்கும் ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குகிறதா என்றால் இல்லை. அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு இதன் நன்மை தீமைகள் மாறுப்படுகிறது.
Image Source: image-credit
இந்நிலையில் மாதுளை ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது என்று இதிலுள்ள உயர் ஆக்சிஜனேற்ற உள்ளடக்கம் காரணமாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் பராமரிக்கப்படுவதோடு, உடலிலுள்ள கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.
Image Source: image-credit
மாதுளை சாற்றில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் பொட்டாசியத்தின் மூலம் அதிகம், பிற வகையான பல ஊட்டச்சத்துக்களும் இப்பழத்தில் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை பயக்கக்கூடியது.
Image Source: image-credit
என்னதான் ஏராளமான நன்மைகள் இப்பழத்தில் நிறைந்து காணப்பட்டாலும் ஒரு சிலர் மாதுளை ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இதனை குடித்தால் அவர்களது உடலில் ஒருசில பிரச்சனைகள் ஏற்படுமாம். அது என்னவென்று இப்பதிவில் காண்போம்.
Image Source: image-credit
மாதுளை ஜூஸில் இருக்கும் கூறுகள் ரத்த அழுத்தத்தை குறைக்கும், அதனால் இது உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு உகந்தது. ஆனால், குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த ஜூஸை குடிக்க கூடாது. இது ரத்த அழுத்தத்தை மேலும் அவர்களது உடலில் கணிசமாக குறைத்து தலை சுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
Image Source: image-credit
பல பேருக்கு இந்த மாதுளை பழம் மற்றும் அதன் சாறு ஒத்துக்கொள்வதில்லை. அப்படி நீங்கள் மாதுளை ஜூஸ் குடித்தவுடன் உங்கள் உடலில் அரிப்பு, எரிச்சல், வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மாதுளை ஜூஸ் அல்லது பழங்கள் எடுத்துக்கொள்வதை நிறுத்துங்கள்.
Image Source: image-credit
மாதுளை பழச்சாற்றில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைந்து காணப்படுகிறது என்னும் நினைப்பில் நீரிழிவு நோயாளிகள் இதனை உட்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கிறது, அதனால் நீரிழிவு நோயாளிகள் முடிந்தளவு மாதுளையை தவிர்ப்பது நல்லது.
Image Source: image-credit
மாதுளை ஜூஸ் குடித்தால் அது உடலில் கலந்து நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளோடு தொடர்புக்கொள்ளும் திறன் கொண்டது. இதனால் ஒருசில மருந்துகளின் வீரியம் ரத்தத்தில் அதிகரிக்க செய்யலாம். இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மருந்து சாப்பிடுபவர்கள் இதனை தவிர்த்து கொள்ளுங்கள்.
Image Source: pexels
குடல் எரிச்சல் கொள்ளும் நோய்க்குறி, இரைப்பை பிரச்சனை போன்ற தொந்தரவுகள் இருந்தால் மாதுளை ஜூஸ் குடிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் அதிகளவு மாதுளை ஜூஸ் குடித்தாலும் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சனைகள் உள்ளிட்டவை ஏற்படும். அதனால் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்னர் இந்த ஜூஸை தினமும் குடியுங்கள்.
Image Source: image-credit
Thanks For Reading!