[ad_1] மாபெரும் வெற்றிப் படங்களை முதலில் நிராகரித்த ஸ்டார் நடிகர்கள்

மாபெரும் வெற்றிப் படங்களை முதலில் நிராகரித்த ஸ்டார் நடிகர்கள்

Anoj

Jun 3, 2024

அல் பசீனோ- தி காட்ஃபாதர்

அல் பசீனோ- தி காட்ஃபாதர்

பெரும் பாராட்டைப் பெற்ற 'தி காட்ஃபாதர்' திரைப்படத்தில் மைக்கேல் கோர்லியோன் கதாபாத்திரம் தனக்கு சரியானதா என்ற சந்தேகத்தில், அதை ஏற்க தயங்கியுள்ளார். பின்னர் இயக்குநர் கொப்போலாவின் வற்புறுத்தலினால் ஏற்று நடித்துள்ளார்

Image Source: x-com/alpacinoreal

சீன் கானரி - ஜேம்ஸ் பாண்ட்

'டாக்டர் நோ' படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் இவர் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார். சில உறுதிப்பாட்டிற்குப் பிறகு தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும் முதல் ஜேம்ஸ் பாண்டாக முத்திரை பதித்தார்.

Image Source: x-com/007

லியோனார்டோ டிகார்பியோ - டைட்டானிக்

டைட்டானிக் படத்தில் ஜாக் கதாபாத்திரத்தை லியோனார்டோ டிகார்பியோ முதலில் நிராகரித்துள்ளார் . நடிகர் பால் ரூட்டின் தந்தை தான் டைட்டானிக் படத்தில் நடிக்க லியோவை சம்மதிக்க வைத்துள்ளார்.

Image Source: facebook-com/1985saturn

கிறிஸ்டியன் பேல் - தி டார்க் நைட்

'பேட்மேன்' கதாபாத்திரத்தின் முன்மொழிவைக் கூட கேட்க விரும்பவில்லை என்று கேள்விப்பட்டவுடன், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் அவரை சம்மதிக்க வைக்க தனிப்பட்ட முறையில் நேரிலேயே சென்றுள்ளார்.

Image Source: facebook-com/darkknighttrilogy

டாம் ஹாங்க்ஸ் - ஃபாரஸ்ட் கம்ப்

'ஃபாரஸ்ட் கம்பின்' கதாபாத்திரத்தை எப்படி அணுகுவது என்று புரியாமல் டாம் முதலில் தயங்கியுள்ளார். பலமுறை ஸ்க்ரிப்ட்டை படித்துவிட்டு இறுதியாக ஒப்புக்கொண்டார். அகாடமி விருதை இந்த படம் அவருக்கு வென்று தந்தது.

Image Source: x-com/ayshardzn

மெரில் ஸ்ட்ரீப் - தி அயர்ன் லேடி

ஆஸ்கர் விருதைப் பெற்று தந்த 'தி அயர்ன் லேடி' படத்தில் மார்கரேட் தாட்சராக நடிக்க மெரில் முதலில் நிராகரித்துள்ளார். இயக்குநர் இந்த படம் அரசியல்வாதிகளின் மறுபக்கத்தைக் காட்ட உதவும் என்று ஊக்குவித்து சம்மதம் பெற்றுள்ளார்.

Image Source: facebook-com/ironladymovie

மார்க் ருஃப்பால்லோ - ஹல்க்

ஹல்க் கதாபாத்திரத்தைக் கிட்டத்தட்ட மார்க் நிராகரித்துள்ளார், பின்னர் அயர்ன் மேனாக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் 'நாம் சேர்ந்து நடிக்க இது ஒரு வாய்ப்பு' என்று கூறி அவரை சம்மதிக்க வைத்துள்ளார்.

Image Source: facebook-com/markruffalo

ஜெனிபர் லாரன்ஸ் - தி ஹங்கர் கேம்ஸ்

பல பாகங்களைக் கொண்ட 'தி ஹங்கர் கேம்ஸ்' படத்தில் நடிக்க முதலில் ஜெனிபர் ஆர்வம் காட்டவில்லை. கர்னிஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க அவரது தாயார் தான் அவரை சம்மதிக்க வைத்துள்ளார்.

Image Source: instagram-com/1jnnf

எம்மா வாட்சன் - ஹாரி பாட்டர்

'ஹாரி பாட்டர்' படத்தில் ஹெர்மியானி கிரேஞ்சர் கதாபாத்திரத்தை ஏற்பதற்கு முன், இளம் வயதிலேயே நீண்ட கால தயாரிப்பில் இணைவது குறித்துத் தயங்கியுள்ளார். இந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட பிறகு சம்மதித்துள்ளார்.

Image Source: x-com/emmawatsonnet

Thanks For Reading!

Next: ரசிகர்களை மிரளவைத்த டாப் 8 கேங்ஸ்டர் தமிழ் திரைப்படங்கள்!

[ad_2]