Jun 4, 2024
BY: mukesh Mநமது பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்று தான் மாப்பிள்ளை சம்பா அரிசி. இந்த அரிசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். இந்த அரிசியில் சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம்.
Image Source: istock
மாப்பிள்ளை சம்பா அரிசி - 1 கப், து.பருப்பு - 1/2கப், பூசணிக்காய் - 1கப், கத்திரிக்காய், முருங்கைக்காய், சி.வெங்காயம்-10, தக்காளி -2, மற்றும் சாம்பார் வைக்க வழக்கமாக தேவைப்படும் இதர பொருட்கள்.
Image Source: pixabay
மாப்பிள்ளை சம்பா அரிசியை நன்றாக கழுவி எடுத்து ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வீதம் ஊற்றி குக்கரில் வேக வைக்க வேண்டும். துவரம் பருப்பினை தனியாக வேகவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
Image Source: pixabay
சிறிய நெல்லிக்காய் அளவிலான புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய் உள்ளிட்டவற்றை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
Image Source: pexels-com
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர் அதில் கடுகு, உ.பருப்பு, பெருங்காயத்தூள், கா.மிளகாய், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து விடவும். பின்னர் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
Image Source: pexels-com
வெங்காயம் தக்காளி வதங்கிய பின்னர் அதில் நறுக்கி வைத்த காய்கறிகள், மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து சற்று வதங்கிய பிறகு புளி கரைசலையும் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் .
Image Source: pixabay
நன்கு கொதித்து வந்த பிறகு அதில் வேக வைத்துள்ள மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் துவரம் பருப்பினை போட்டு சாம்பார் கெட்டியான பதம் வரும் வரை நன்கு கிளறி விடவேண்டும்.
Image Source: istock
இறுதியாக தாளிப்பு கரண்டியில் உ.பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பெ.தூள், கா.மிளகாய் போட்டு தாளித்து அதனை சாம்பாரில் ஊற்றி, கொத்தமல்லி தழைகளை போட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மாப்பிள்ளை சம்பா அரிசி சாம்பார் ரெடி.
Image Source: pexels-com
மாப்பிள்ளை சம்பா அரிசியினை ஊறவைக்காமல் நேரடியாக வேக வைப்பது சாம்பார் சுவையினை கூட்டும். காய்கறிகளையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். விருப்பப்பட்டால் சிறிது வெள்ளம் சேர்த்து கொள்ளலாம்.
Image Source: pexels-com
Thanks For Reading!