Jun 1, 2024
By: Anojஉங்கள் கணவன் வீட்டார் மிகவும் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை விடுங்கள், உங்களை போலவே அவர்களிடமும் சில குறைபாடுகள் இருக்கும் என்கிற புரிதலை மனதில் நிறுத்துவதே நல்லுறவுக்கு வழிவகுக்கும்.
Image Source: istock
மாமனார், மாமியாரின் எல்லைகளை மதிப்பதோடு, உங்களின் சுதந்திரத்திற்கு தேவையான எல்லைகளை வகுத்து அவற்றை வெளிப்படையாக பேசுங்கள். எல்லைகளை புறக்கணிப்பது தவறான புரிதல்களுக்கும் மோதல்களுக்கும் வழிவகுக்கும்.
Image Source: istock
உங்கள் மாமியார் குடும்பத்தை உங்கள் சொந்த குடும்பத்துடன் அல்லது பிற குடும்பங்களுடன் ஒப்பிடுவதைத் தவிருங்கள். ஒவ்வொரு குடும்பமும் தனித்துவமானது மற்றும் குறை நிறைகளைக் கொண்டது, ஒப்பிடுவதன் மூலம் மனக்கசப்பு மட்டுமே மிஞ்சும்.
Image Source: istock
எந்தவொரு உறவிலும் உண்மையான உணர்வு பரிமாற்றம் என்பது முக்கியம். உங்களது கவலைகள், பிரச்சனைகள் மற்றும் எண்ணங்களை கடினமான உரையாடல் என்று தவிர்க்காமல் வெளிப்படையாக கூறுங்கள். அதே நம்பிக்கைய அவர்களுக்கும் உங்களிடத்தில் ஏற்படுத்துங்கள்.
Image Source: pexels-com
குடும்பத்தில் மோதல்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டால் பிறர் மீது பழி சுமத்துவதைத் தவிருங்கள். அதற்கு பதிலாக, எதிரில் உள்ளவரின் நிலையில் இருந்தும் சிந்தித்து, இணைந்து பிரச்சனைக்கான தீர்வை தேடுவதே புத்திசாலித்தனம்.
Image Source: istock
மாமனார், மாமியாருடன் இணைந்து நேரத்தை செலவிடுங்கள். எப்போதும் அவர்களை தவிர்த்து வெளியில் செல்வது போன்ற செயல்கள் ஒதுக்கப்படும் உணர்வை அவர்களுக்கு தருவதோடு, உறவிலும் விரிசலை ஏற்படுத்தும்.
Image Source: pexels-com
வீட்டில் வரும் பிரச்சனைகளில் ஒருவர் பக்கம் மட்டும் எடுக்காமல், நடுநிலமையுடன் சமரசம் செய்ய முயற்சிப்பதே குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டும். யார் மேல் அதிக தவறு என்று ஆராய்வதால் எந்த பயனும் இல்லை.
Image Source: pexels-com
மாமனார், மாமியார் ஆகியோரின் வயதுக்கு முதலில் மரியாதை கொடுங்கள். ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அதை மரியாதையுடன் கையாளுங்கள். குழந்தை வளர்ப்பிலும் அவர்களது அக்கறையான ஆலோசனைகளை காது கொடுத்து கேளுங்கள்.
Image Source: pexels-com
உங்கள் கணவன் குடும்பத்திற்கென தனிப்பட்ட பாரம்பரியமும் கலாச்சாரங்களும் இருக்கும். அது நீங்கள் வளர்ந்த சூழலுக்கு மாற்றாக இருந்தாலும் உங்களால் முடிந்த வரை அவற்றை பின்பற்றுவது ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
Image Source: pexels-com
Thanks For Reading!