May 4, 2024
மாம்பழத்தின் தோலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைப் பற்றி இங்கு விரிவாக காணலாம்
Image Source: istock
ஆய்வின்படி, மாம்பழத் தோலில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருக்க செய்கின்றன. குறிப்பாக, Mangiferin போன்ற கலவைகள், புற்றுநோய் செல் வளர்ச்சியை குறைக்க உதவுகிறது
Image Source: istock
சூரிய ஒளியின் கதிர் வீச்சு தாக்குதலை சமாளிக்கும் கலவைகள் மாம்பழத் தோலில் உள்ளன. அதன் சாற்றை சருமத்தில் பயன்படுத்துவது மூலம் வெயிலினால் உண்டாகும் சேதங்களை தடுத்திட முடியும்
Image Source: istock
மாம்பழத் தோலில் தயாரிக்கப்பட்ட தேநீரை குடிப்பது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிலுள்ள Mangiferin எனும் கலவை சுகரை கட்டுப்படுத்தவும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது
Image Source: pexels-com
மாம்பழத் தோலில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், வாயில் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கக்கூடும். அதை வாயில் போட்டு மென்னுவது அல்லது மாம்பழ தோல் சாறு இருக்கும் மவுத் வாஷ் பயன்படுத்துவது, ஈறு நோய் உட்பட வாய் பிரச்சனைகளை தடுக்கும்
Image Source: istock
மாம்பழத் தோலில் காணப்படும் tannins போன்ற கலவைகள், காயத்தை குணப்படுத்தும் பண்புகளை கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதன் சாற்றை காயத்தில் தடவுவது குணப்படுத்தும் பிராசஸை வேகப்படுத்த செய்யலாம்
Image Source: istock
தோலில் காணப்படும் சில கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உடலில் தேவையற்ற வீக்கத்தை தடுப்பதோடு கீல்வாதம் மற்றும் அழற்சி குடல் நோய்கள் போன்ற நிலைகளின் அறிகுறிகளை போக்கக்கூடும்
Image Source: istock
மாம்பழத் தோலில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்துவதால் மலச்சிக்கல் அபாயம் குறையக்கூடும். அதேபோல், நீண்ட நேரம் வயிறு முழுமையான உணர்வை அளித்து, அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது
Image Source: istock
உலர்ந்த மாம்பழத் தோலை பவுரடாக அரைத்து, சட்னி அல்லது ஸ்மூத்தியாக ரெடி செய்து உட்கொள்ளாம். இதுதவிர மாம்பழ தோலை சிறிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி தேநீர் வடிவில் அருந்த செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!