May 8, 2024
மாம்பழம் கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் ஒரு பழமாகும். அது சுவையாக இருப்பதோடு, பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இந்தப் பதிவில், மாம்பழம் தொடர்பாக மக்களிடையே பரவியுள்ள கட்டுக்கதைகளை பற்றி பார்க்காலம்
Image Source: pexels-com
மாம்பழம் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்பது தவறு. அதில் நார்ச்சத்து இருப்பதால், பசியை குறைத்து அதிகமாக சாப்பிடுவதை தடுக்கவே செய்கிறது
Image Source: istock
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் மினரல் உள்ளன. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி முகப்பருக்கள் வராமல் பாதுகாக்க செய்கிறது
Image Source: istock
மாம்பழம் இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும், குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். அதேபோல், மாம்பழத்தில் உள்ள mangiferin எனும் கலவை, ரத்த சர்க்கரை அளவை குறைத்திட உதவுகிறது
Image Source: istock
மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கலாம் என்பது உண்மை தான். இதை தடுக்க, சாப்பிடும் முன் மாம்பழத்தை நீரில் ஊறவைக்க வேண்டும். கொஞ்சமாக சாப்பிடுகையில் உடலின் வெப்பநிலை அதிகரிக்க செய்யாது
Image Source: istock
கர்ப்ப காலத்தில் மாம்பழம் மிதமான அளவில் சாப்பிடுவது தவறு கிடையாது. ஆனால், உடல் பருமன் மற்றும் நீரிழவு நோயால் அவதிப்படும் கர்ப்பிணிகள், மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது
Image Source: istock
மாம்பழத்தை போலவே மாம்பழ தோலில் கூட அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது. அவற்றை சாப்பிடுவதால் உடலில் எவ்வித பிரச்சனைகளும் உண்டாக செய்யாது
Image Source: istock
மாம்பழ விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. அதை பொடியாக்கி, முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்தலாம்
Image Source: istock
மாம்பழத்தை உணவுக்கு பிறகு சாப்பிடாமல், 2 உணவுக்கு இடையே ஸ்நாக்ஸாக சாப்பிடுவது தான் சிறந்த முடிவாகும். அதேபோல், இரவு தாமதமாக சாப்பிடுவது, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யலாம். தினமும் 300 கிராம் சாப்பிடுவது பாதுகாப்பான நுகர்வாகும்
Image Source: istock
Thanks For Reading!