May 27, 2024
மாரடைப்பு, உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாகும். அது படங்களில் காட்டுவது போல் ஒருவரை திடீரென பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தாது. சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்போ அதன் அறிகுறிகள் உடலில் வெளிப்படக்கூடும். அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
மார்பில் வலி ஏற்படுவது மாரடைப்புக்கான பொதுவான அறிகுறியாகும். மார்பில் அழுத்தம் அல்லது இறுக்கம் போன்ற உணர்வு ஏற்படக்கூடும். அவை அடிக்கடி லேசாக தென்பட்டாலும், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது
Image Source: istock
உடல் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக காணப்படுவது, மாரடைப்புக்கான மற்றொரு பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்திருப்பதை உணர்த்துகிறது. ஆய்வின்படி, 70 சதவீத பெண்கள் மாரடைப்பு முன்பு சோர்வை எதிர்கொண்டுள்ளனர்
Image Source: istock
தலைச்சுற்றலுக்கு உணவு சாப்பிடாமல் இருப்பது (அ) நீரிழப்பு என பல காரணங்கள் இருந்தாலும், மாரடைப்புக்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. தலைச்சுற்றலுடன் நெஞ்சு வலி அல்லது மூச்சுத்திணறலை எதிர்கொண்டால், மாரடைப்பு உடனடியாக வரக்கூடும்
Image Source: istock
வயிற்று வலி, குமட்டல், வயிறு மந்தமான உணர்வு ஆகியவையும் மாரடைப்புக்கு முன்பு உடலில் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படலாம். அசிடிட்டி கூட மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்
Image Source: pexels-com
எவ்விதமான உடல் செயல்பாடுகளும் இன்றி உடல் அளவுக்கு அதிகமாக வியர்ப்பது, மாரடைப்பு வரப்போவதை எச்சரிக்கை செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்
Image Source: istock
கால்கள், கணுக்கால் அல்லது பாதங்களில் திடீரென வீக்கம் ஏற்படுவது, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அவை இதயத்தின் செயல்பாட்டு திறன் குறைந்திருப்பதை குறிக்க செய்கிறது
Image Source: istock
மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிப்பது, மாரடைப்பின் மற்றொரு பொதுவான அறிகுறியாகும். இது உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதயம் போதுமான ரத்தத்தை பம்ப் செய்ய முடியாதபோது ஏற்படக்கூடும்
Image Source: istock
மார்பு வலி, மாரடைப்பின் பொதுவான அறிகுறியாக இருந்தாலும், உடலில் பிற பாகங்களிலும் நீங்கள் அசெளகரியத்தை சந்திக்க நேரிடலாம். கைகள், முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிறு பகுதியில் ஒரு விதமான அழுத்தம் உண்டாகக்கூடும். அவை சில நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் கூட நீடிக்க செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!