[ad_1] மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் தினசரி பழக்க-வழக்கங்கள்!

மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் தினசரி பழக்க-வழக்கங்கள்!

Jun 14, 2024

By: mukesh M

மார்பக புற்றுநோய்!

பெண்களை அதிகமாக பாதிக்கும் ஆபத்து காரணிகளில் மார்பக புற்றுநோயும் ஒன்று. மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு நாம் உண்ணும் உணவு, பழக்க வழக்கங்கள் போன்றவையும் ஒரு காரணமாக உள்ளன. அவற்றை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Image Source: istock

மது அருந்துதல்!

அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குடிப்பழக்கம் அல்லாத பெண்களுடன் ஒப்பிடும்போது மது அருந்தும் பெண்களை இந்த மார்பக புற்றுநோய் அதிக அளவில் பாதிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Image Source: istock

பருமனாக இருப்பது!

மாதவிடாய் நின்ற பிறகு அல்லது உடல் பருமனாக இருக்கும் பெண்களை இந்த மார்பக புற்றுநோய் பாதிக்கிறது. உடல் எடை அதிகமாக உள்ள பெண்களுக்கு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகமாக இருப்பதால் மார்பக புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

Image Source: istock

உடல் இயக்கம் இல்லாதது!

உடல் இயக்கம் இல்லாமல் இருக்கும் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களின் இந்த மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க தினசரி உடற்பயிற்சி, உடல் சார்ந்த வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது.

Image Source: istock

தாய்ப்பால் கொடுக்காமல் இருத்தல்!

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தை இல்லாத பெண்கள், தாய்ப்பால் கொடுக்காத பெண்களில் இந்த மார்பக புற்று நோயின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.

Image Source: pexels-com

கருத்தடை மாத்திரைகள்!

கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆய்வுகளில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தாத பெண்களுக்கு இதன் பாதிப்பு குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Image Source: istock

ஹார்மோன் சிகிச்சைகள்!

மாதவிடாய் பிரச்சனைகள் சார்ந்த ஹார்மோன் சிகிச்சைகள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Image Source: istock

அறிகுறிகள் உண்டா?

இரவு நேரங்களில் வியர்த்தல், திடீரென்று உடல் எடை கூடுதல், சுவாசித்தலில் சிரமம், மார்பகங்களில் வலி, சோர்வாக இருத்தல், அசாதாரணக் கட்டி அல்லது வீக்கம் போன்றவை மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

Image Source: istock

தடுப்பு நடவடிக்கைகள்!

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கம் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவும். அடிக்கடி மார்பகங்களை சுய பிரச்சினை செய்து கொள்வது சரியான நேரத்தில் பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய உதவும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: கர்ப்பிணி பெண்கள் முலாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா?

[ad_2]