Jun 8, 2024
கோடையில் கிடைக்கும் மாம்பழம் மற்றும் பலாப்பழம் கலவையில் சுவையான பாயாசம் ஒன்றினை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.
Image Source: istock
மாம்பழம் - 1 | பலா சோலை - 10 | நெய் - 2 ஸ்பூன் | பால் - 1 கப் | சேமியா - 1 கப் | தேங்காய் பால் - 1 கப் | குங்குமப் பூ - 1 சிட்டிகை | ஏலக்காய் - 3
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட மாம்பழத்தை தோல், விதை நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதேநேரம் எடுத்துக்கொண்ட பலா சோலைகளையும் நறுக்கி தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: pexels-com
தொடர்ந்து கடாய் ஒன்றில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் சேமியா சேர்த்து பதமாக வேக வைத்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: istock
தொடர்ந்து எடுத்துக்கொண்ட பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து காய்ச்சி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: istock
தற்போது பாயாசம் தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய்யுடன் பலாப்பழம், மாம்பழம் சேர்த்து 4 - 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து இதனுடன் அவித்து எடுத்த சேமியா, மில்க் மேட் ஒரு ஸ்பூன் அளவுக்கு சேர்த்து கிளறிவிடவும்.
Image Source: istock
தொடர்ந்து இதனுடன் தேங்காய் பால், தண்ணீரில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
பின் இறுதியாக இதனுடன் ஏலக்காய் இடித்து சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான மா - பலா பாயாசம் ரெடி! சுட சுட ஒரு கோப்பையில் சேர்த்து பரிமாறலாம்!
Image Source: istock
Thanks For Reading!