May 17, 2024
இறால் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ‘சீரக சம்பா இறால் பிரியாணியை’ மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
இறால் - 300கி | பிரியாணி இலை - 3 | அன்னாசி பூ - 2 | பட்டை - 2 துண்டு | ஏலக்காய் - 3 | கால்பாசி - கால் ஸ்பூன் | சீரகம் - 1 ஸ்பூன் | மிளகு - 1 ஸ்பூன் | முந்திரி பருப்பு - 4 | வெங்காயம் - 2 | பச்சை மிளகாய் - 3
Image Source: istock
அரிசி - 2 கப் | தக்காளி - 2 | புதினா - 1 கொத்து | கொத்தமல்லி - 1 கொத்து | இஞ்சி - 1" அளவு | பூண்டு பல் - 4 | தயிர் - ½ கப் | மஞ்சள் - 1 ஸ்பூன் | | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட இறாலை நன்கு சுத்தம் செய்து, சிறிய பாத்திரம் ஒன்றில் உப்பு, மஞ்சளுடன் சேர்த்து கலந்து 10 - 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
Image Source: istock
அதேநேரம் எடுத்துக்கொண்ட சீரக சம்பா அரிசியை நன்கு அலசி சுத்தம் செய்து பின், ஒரு பாத்திரத்தில் மூழ்கும் அளவு தண்ணீருடன் சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
Image Source: pexels-com
இதனிடையே மிக்ஸி ஜார் ஒன்றில் பிரியாணி இலை, அன்னாசி பூ, பட்டை, ஏலக்காய், கால்பாசி, சீரகம், மிளகு, முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள பிரியாணி மசாலா ரெடி!
Image Source: istock
தொடர்ந்து இதே மிக்ஸி ஜாரில் தக்காளி, புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு ஆகிவற்றை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
Image Source: istock
தற்போது பிரியாணி செய்ய குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெயுடன் தக்காளி - புதினா சேர்மாம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பிரியாணி மசாலா, தயிர் சேர்த்து 4- 5 நிமிடத்திற்கு வதக்கி இறாலையும் சேர்த்து வதக்கவும்.
Image Source: istock
மசாலாவின் பச்சை வாசம் நீங்கும் நிலையில் இதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலையில், அரிசி சேர்த்து கிளறி, 2 விசில் வர வேக வைத்து இறக்க சுவையான இறால் பிரியாணி ரெடி!
Image Source: istock
Thanks For Reading!