May 8, 2024
BY: mukesh Mஆட்டுக்கால் பாயா-வுக்கு நிகரான சுவை கொண்ட வெஜிடேபிள் பாயா ஒன்றினை முருங்கைக்காய் பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.
Image Source: istock
முருங்கைக்காய் - 3 | தேங்காய் - ½ மூடி | பச்சை மிளகாய் - 6 | சோம்பு - 1 ஸ்பூன் | முந்திரி பருப்பு - 6 | இஞ்சி - 2" அளவு | ஏலக்காய் - 3 | பட்டை - 1 துண்டு | சீரகம் - 1 ஸ்பூன் | புதினா - 1 கைப்பிடி
Image Source: istock
வெங்காயம் - 2 | இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் | தக்காளி - 1 | கொத்தமல்லி - 1 கொத்து | கறிவேப்பிலை - 1 கொத்து | கரம் மசாலா - 1 ஸ்பூன் | மிளகாய் பொடி - 1 ஸ்பூன் | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட முருங்கைக்காய், தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: istock
தற்போது பாயா மசாலா தயார் செய்ய மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்து அதில் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, முந்திரி பருப்பு, இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்
Image Source: pexles-com
தற்போது பாயா தயார் செய்ய குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
Image Source: istock
தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, அரைத்த மசாலா, உப்பு, கரம் மசாலா, மிளகாய் பொடி மற்றும் ஒரு கப்அளவு தண்ணீர் சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து கிளறி குக்கரை மூடி 5 விசில் வர வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
Image Source: istock
இறுதியாக இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான முருங்கைக்காய் பாயா ரெடி!
Image Source: istock
Thanks For Reading!