May 10, 2024
வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. இது சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைக்க உதவுகிறது. ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.
Image Source: pexels-com
அதிகமான மெலனின் உற்பத்தி சருமத்தில் கருமையை உண்டாக்கலாம். இதனால் தோலில் ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏற்படுகிறது. எனவே இந்த ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்க வைட்டமின் ஈ பயன்படுத்தி வரலாம்.
Image Source: istock
வைட்டமின் ஈ ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்தது. இது சருமம் வயதாகுவதை தடுக்க உதவுகிறது. வைட்டமின் ஈ யில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. இதை மேற்பூச்சாக பயன்படுத்தி வரலாம்.
Image Source: istock
வைட்டமின் ஈ எண்ணெய் ஒரு மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இது சரும வறட்சியை போக்குகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தடிப்புத் தோலழற்சியை போக்குகிறது.
Image Source: istock
வைட்டமின் ஈ எண்ணெய் சரும துளைகளை எளிதாக சுத்தம் செய்யும். இது முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
Image Source: istock
வைட்டமின் ஈ எண்ணெயை முகப்பருக்கள் தழும்புகளுக்கு மேற்பூச்சாக பூசி வரலாம். வைட்டமின் ஈ எண்ணெய் முகப்பருக்கள் வடுக்களையும் கரும்புள்ளிகளையும் போக்குகிறது.
Image Source: istock
வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் ஈ எண்ணெயை வெயிலினால் எரிந்த சருமத்தில் தடவி வரலாம். இது சரும எரிச்சலை போக்குகிறது.
Image Source: istock
முகத்தை நன்றாக கழுவி விட்டு 2-3 நிமிடங்கள் சூடான துண்டைக் கொண்டு முகத்தை மூடிக் கொள்ளுங்கள். இது சரும துளைகளை திறக்க உதவுகிறது.
Image Source: istock
சிறுதளவு வைட்டமின் ஈ எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயை எடுத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!