Aug 10, 2024
இந்த பேஸ் மாஸ்கில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்கள், சருமம் புத்துயிர் பெறவும், பொலிவை அதிகரிக்கவும், இறந்த சரும செல்களை நீக்கவும் உதவுகிறது. அதன் எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
இலவங்கப்பட்டை தூள் - 1 டீஸ்பூன்; ஜாதிக்காய் பொடி - 1 டீஸ்பூன்; கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்; தேன் - 2 டீஸ்பூன்
Image Source: istock
முதலில் ஒரு பவுலில் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை மற்றும் 1 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியை சேர்க்க வேண்டும்
Image Source: istock
அடுத்து, 1 டீஸ்பூன் கோகோ பவுடர் மற்றும் 2 டீஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.
Image Source: istock
இந்த கலவையை முகத்தில் தடவி சுமார் 20 நொடிகள் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு, 10 நிமிடங்கள் ஆனதும் முகத்தை கழுவ வேண்டும்
Image Source: istock
இலவங்கப்பட்டை தூளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், சருமத்தை சுத்தப்படுத்தவும், முகப்பருவை எதிர்த்து போராடவும் உதவுகிறது. சிறந்த எக்ஸ்ஃபோலியேட் ஆகவும் சருமத்தில் பயன்படக்கூடும்
Image Source: istock
ஜாதிக்காய் பொடியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. அவை எக்ஸ்ஃபோலியேட் செய்வது மட்டுமின்றி கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது.
Image Source: istock
கோகோ பவுடரில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் நீரேற்றத்தை அதிகரிக்கும் பண்புகள் உள்ளது. ஈரப்பதத்தை தக்கவைப்பது, ரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்ற எண்ணற்ற நன்மைகளை கோகோ பவுடர் வழங்குகிறது
Image Source: istock
தேன் நீரேற்றத்தை அதிகரிக்கவும், சருமத்தை ஆற்றவும் உதவுகிறது. சருமத்தில் புத்துணர்ச்சியும், இளமை தோற்றத்தையும் மீட்டெடுக்கவும் உதவக்கூடும்.
Image Source: pexels-com
Thanks For Reading!