[ad_1] முகத்தில் கரும்புள்ளிகளை உடனே நீக்கும் 'வாழைப்பழம் - எலுமிச்சை' பேஸ் பேக்

May 3, 2024

முகத்தில் கரும்புள்ளிகளை உடனே நீக்கும் 'வாழைப்பழம் - எலுமிச்சை' பேஸ் பேக்

Anoj

வாழைப்பழ ஊட்டச்சத்துக்கள்

வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது சருமத்திற்கு உள்ளிருந்து பளபளப்பு அளிக்கிறது.

Image Source: istock

ஃபேஸ் பேக் நன்மைகள்

இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பயன்படுகிறது. சருமத்தை எக்ஸ்ஃபோலியண்ட் செய்கிறது. சருமத்தை பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.

Image Source: istock

பயன்படுத்தும் முறை

ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் அரை பழுத்த வாழைப் பழத்துடன் 1 டீஸ்பூன் கடலை மாவு, 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

Image Source: istock

தண்ணீர் சேருங்கள்

பேஸ்ட் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பேஸ்ட்டை நன்றாக கட்டியில்லாமல் கலக்க வேண்டும்

Image Source: istock

அப்ளை செய்யுங்கள்

இப்பொழுது இந்த பேஸ்ட்டை எடுத்து உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்யுங்கள். விரல்களை கொண்டு வட்டவடிவில் மசாஜ் செய்யவும். பின் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள்.

Image Source: pexels-com

முகத்தை கழுவுங்கள்

பிறகு முகத்தை சாதாரண நீர் கொண்டு கழுவுங்கள். முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை போக்குகிறது.

Image Source: istock

எலுமிச்சை

எலுமிச்சை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இது கரும்புள்ளிகளை குறைக்கிறது. சொரியாஸிஸ் அறிகுறிகளை குறைக்கிறது.

Image Source: istock

கடலை மாவு

கடலை மாவு முகத்தில் உள்ள எண்ணெய் பசைகளை நீக்குகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகளை குறைக்கிறது. சருமம் வயதாகுவதை தடுக்கிறது.

Image Source: istock

பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்

இந்த ஃபேஸ் பேக்கை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்பு சிறிதளவு எடுத்து பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். ஏதேனும் அழற்சி தென்பட்டால் உடனே தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

Image Source: istock

Thanks For Reading!

Next: மோரை பயன்படுத்தி சருமம் மற்றும் கூந்தலை எப்படி அழகாக வைக்கலாம்?

[ad_2]