Jun 8, 2024
பச்சை மாங்காய் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு நிறைய பளபளப்பை தருகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. மேலும் வைட்டமின் சி சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்கிறது.
Image Source: istock
1 பச்சை மாங்காய், ஓட்ஸ்மீல், பாதாம் பருப்பு மற்றும் பால் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
பச்சை மாங்காயை நன்றாக மசித்து அதனுடன் ஓட்ஸ்மீல், பாதாம் பருப்பு மற்றும் பால் ஆகியவை சேர்த்து பிசைந்து சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவுங்கள்.
Image Source: istock
கடலை மாவு அல்லது உளுந்தம் மாவை பச்சை மாங்காயுடன் சேர்த்து அதனுடன் தேன், தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி வாருங்கள். இது சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.
Image Source: istock
மாங்காய் தோலை தூக்கி எறியாமல் அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பயன்படுத்தி வரலாம். இது கண்களில் இருக்கும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
Image Source: istock
மாங்காயுடன், தயிர், ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 15 - 20 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பிறகு கழுவுங்கள். இது பொலிவான சருமத்தை தருகிறது.
Image Source: istock
பச்சை மாங்காயுடன் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக்கி சருமத்தில் தடவுங்கள். பின்பு கழுவுங்கள். சருமக் கோடுகளை போக்க இது உதவுகிறது.
Image Source: istock
பச்சை மாங்காயை நன்றாக மசித்து 2 ஸ்பூன் வெண்ணெய், தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வறண்ட சருமம் நீங்கும்.
Image Source: istock
இந்த மாங்காய் ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வாருங்கள். இது இறந்த சரும செல்களை நீக்க உதவுகிறது. முகத்தில் உள்ள தேவையற்ற பருக்களை போக்க உதவுகிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!