Jun 5, 2024
சருமத்தை பொலிவாக்க பெண்கள் ஏராளமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடியது என்பதால் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் பேஸ் மாஸ்குகளை பயன்படுத்துவது நல்லது.
Image Source: istock
டார்க் சாக்லேட்களில் ஆன்டி-ஆக்சிடென்ட்டுக்கள் அதிகம் என்பதால் இது வயதான தோற்றமளிப்பதை தடுக்கிறது, மேலும் கொலாஜென்னை அதிகப்படுத்தி முகத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.
Image Source: istock
டார்க் சாக்லேட் ஒரு மேசை கரண்டி, 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், சிறிதளவு தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தினை க்ளென்ஸ் மற்றும் டோன் செய்த பிறகு போடவும். 15-20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் பொலிவு தெரியும். பின்னர் மாய்ஸ்சரைசர் தடவி கொள்ளுங்கள்.
Image Source: istock
டார்க் சாக்லேட்டில் உள்ள ஆக்சிஜெனேட்டர்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் ஃப்ரீ-ரேடிக்கல் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் இளமையான சருமத்தினை பெறலாம்.
Image Source: istock
டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ வெண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தினை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது.
Image Source: istock
நீரிழப்பு மற்றும் வறண்ட தோல் கொண்ட நபர்கள் இந்த ஃபேஷியலை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மென்மையான மிருதுவான சருமத்தினை பெறலாம்.
Image Source: istock
தாமிரம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட தாமரங்கள் டார்க் சாக்லேட்டில் நிறைந்துள்ளதால் இது முகத்தில் புது செல்களை உருவாக்கம் செய்வதோடு சருமத்தின் சேதமடைந்த செல்களை சீர் செய்து பொலிவான நிறத்தினை சருமத்திற்கு தருகிறது.
Image Source: istock
டார்க் சாக்லேட் சருமத்தின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, சருமத்திற்கு ஊட்டச்சத்து விநியோகத்திற்கும் உதவுகிறது. அதேபோல் மந்தமான, சீரற்ற தோல் தொனியின் தோற்றத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
Image Source: istock
அதிக மன அழுத்தம் முகப்பரு, ப்ரீ-மெச்யூர் ஏஜிங் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியது. டார்க் சாக்லேட்டில் பயன்படுத்துவதன் மூலம் மன அழுத்தம் சீராக நிர்வகிக்கப்பட்டு சருமத்தின் பொலிவிற்கு மறைமுகமாக பயன்படுகிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!