Jul 5, 2024
தேனில் ஆன்டி மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள், குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. வீட்டிலேயே தேன் ஃபேஸ் பேக்கை எப்படி பயன்படுத்தலாம் என அறிந்து கொள்வோம்.
Image Source: pexels-com
தேன் - 2 டேபிள் ஸ்பூன், கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன், ஜோஜோபா எண்ணெய் - 1 டீஸ்பூன், ஆர்கான் எண்ணெய், லாவெண்டர் அல்லது புதினா எண்ணெய் - 2-3 சொட்டுகள் என எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் தேன், கற்றாழை ஜெல், ஜோஜோபா எண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை நன்றாக கலக்குங்கள்.
Image Source: istock
அதனுடன் புதினா எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெயை 2-4 துளிகள் சேருங்கள். அத்தியாவசிய எண்ணெய்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க பயன்படுகிறது.
Image Source: istock
எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்த பிறகு நன்றாக கலக்குங்கள். மென்மையான தன்மை வரும் வரை நன்றாக கலக்க வேண்டும்.
Image Source: istock
இந்த தேன் சீரத்தை காற்று புகாத பாட்டிலில் அடைத்து ஃபிரிட்ஜில் வையுங்கள். தேவைப்படும் போது இதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
Image Source: istock
முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி பாட்டிலில் உள்ள சிறுதளவு சீரத்தை எடுத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
Image Source: istock
இந்த சீரத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமம் ஹைட்ரேட்டிங் தன்மை அடைகிறது. சருமம் மாய்ஸ்சரைசர் தன்மையுடன் இருக்கும். நாள் முழுவதும் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
Image Source: istock
இந்த சீரத்தை ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து வையுங்கள். இதில் சில துளிகள் எடுத்து சருமத்தில் அப்ளை செய்து பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். ஏதேனும் அழற்சி தென்பட்டால் உடனே தோல் மருத்துவரை அணுகுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!