[ad_1] முகம் பளிச்சென்று மாற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Aug 20, 2024

முகம் பளிச்சென்று மாற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Nivetha

முகப்பொலிவு

தற்போதைய காலத்தில் வெளியில் ஏகப்பட்ட மாசுக்கள், தூசிகள் ஏற்படுவதால் நமது சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது. இதற்கு ரசாயனங்கள் கலந்த பல்வேறு பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் இதுவும் நமது சருமத்திற்கு தீங்கினை தான் அளிக்கும். எனவே, சருமம் பளிச்சென மாற நாம் ஒருசில உணவு வகைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Image Source: pixabay

தவறான உணவு பழக்கம்

பலரும் தவறான உணவு பழக்கம் காரணமாக விரைவில் வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். எனவே சருமத்திற்கு நன்மை அளிக்கும் உணவுகளை நாம் தேடி எடுத்து சாப்பிட்டால் சருமத்திற்கு பாதுகாப்பு கிடைப்பதோடு, செல்கள் புத்துயிர் பெற்று பொலிவாகும்.

Image Source: pixabay

இளநீர்-மோர்

கோடைக்காலத்தில் நமது உடல் உஷ்ணம் அதிகமாகி பல்வேறு உடல்நல பிரச்சனைகளை மட்டுமல்லாமல், சருமம் சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இதனை தடுக்க தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குடிப்பது, இளநீர், மோர் போன்ற உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும்.

Image Source: pixabay

முட்டை

சரும ஆரோக்கியத்தில் புரதம் பெரும் பங்கினை வகிக்கிறது. புரதச்சத்து குறைபாடு காரணமாக நமது சருமம் வறண்டு காணப்படும், சரும செல்களும் இறந்துவிட கூடும். எனவே முட்டையை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள், முட்டை சாப்பிடாதோர் பன்னீர், பருப்பு வகைகள், சோயா பீன்ஸ் உள்ளிட்டவைகளை எடுத்து கொள்ளலாம்.

Image Source: istock

பழங்கள்

மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கொய்யாப்பழம், எலுமிச்சை போன்ற பழங்களில் அதிகளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுக்கள் நிறைந்துள்ளது, இதனை அடிக்கடி சாப்பிடுங்கள். மேலும் நமது தினசரி உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள். பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளை தினமும் சாப்பிட்டால் முகம் பொலிவாக மாறும்.

Image Source: istock

ஒமேகா 3

ஒமேகா சத்து நிறைந்த பாதாம், அக்ரூட் பருப்புகள், மீன்கள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் உள்ளிட்டவைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதிலிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமது உடலுக்குள் சென்று சருமத்திற்கு எண்ணெய் தன்மையை சீராக வைக்க உதவுவதோடு சருமத்தையும் பொலிவாக வைத்து கொள்கிறது.

Image Source: istock

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்

பாலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இதனை குடிப்பதால் நமது சருமத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. அதே போல் நெய், தயிர், வெண்ணெய் போன்ற பால் சம்மந்தப்பட்ட பொருட்களை சாப்பிட்டாலும் சருமம் பொலிவு பெறும்.

Image Source: pexels

குங்குமப்பூ

பாலில் குங்குமப்பூ கலந்து குடித்து வந்தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் மீண்டும் புத்துயிர் பெற உதவும். முகமும் பிரகாசமாகவும், நல்ல பொலிவுடனும் காணப்படும். இது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை அளிக்கிறது.

Image Source: istock

உடற்பயிற்சி

உடல் எடையை குறைக்க தான் உடற்பயிற்சி என்பதில் உண்மையில்லை, உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும ஆரோக்கியமும் மேம்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Image Source: istock

Thanks For Reading!

Next: தடிமனான, பிங்க் நிற உதடுகளை அளிக்கும் 'காபி லிப் பாம்' செய்முறை

[ad_2]