[ad_1] முகலாயர் வரலாற்றை அறிய இந்த இடத்திற்கு செல்லுங்கள்!

May 13, 2024

முகலாயர் வரலாற்றை அறிய இந்த இடத்திற்கு செல்லுங்கள்!

mukesh M

முகலாய வரலாறு!

முகலாய காலம் என்று கூறினாலே பிரம்மாண்டமான அரண்மனைகள், வளமான கலை மற்றும் கலாச்சாரம், மக்களை ஈர்க்கக்கூடிய நினைவுச் சின்னங்கள் தான் நினைவிற்கு வரும். இந்நிலையில், இவர்களின் வரலாற்றை அறிந்துக்கொள்ள உதவும் சில சுற்றுலா தலங்கள் பற்றி இங்கு காணலாம்!

Image Source: unsplash-com

தாஜ்மஹால்!

உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால். ஆக்ராவில் இருக்கும் இந்த தாஜ்மஹால் முகலாய கட்டிடக்கலையின் ஒரு அற்புதமான உதாரணம் என்று கூறலாம். ஷாஜகான் என்ற முகலாய அரசர் தனது மனைவி மும்தாஜ்காக கட்டிய அன்பின் சின்னம் இந்த தாஜ்மஹால்.

Image Source: pexels-com

செங்கோட்டை

டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகானால் கட்டப்பட்டது. இந்த செங்கோட்டையின் சிவப்பு மணற்கற்கள், சுவர்கள் மற்றும் அழகான பலிங்கு கட்டிடங்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது.

Image Source: unsplash-com

ஃபதேபூர் சிக்ரி

உத்திரபிரதேசத்தில் உள்ள இந்த சுற்றுலா தளம் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முகலாய காலத்தில் பேரரசர் அக்பரின் தலைநகரம் இது. இங்குள்ள அழகான அரண்மனைகளும் மசூதிகளும் மிகவும் பிரபலம்.

Image Source: unsplash-com

ஹுமாயூன் கல்லறை

டெல்லியில் அமைந்துள்ள ஹுமாயூன் கல்லறை இரண்டாவது முகலாய ஆட்சியாளர் ஹுமாயுன் பேரரசரின் நினைவிடம். இது தாஜ்மஹாலின் முன்னோடியாக கருதப்படும் ஒரு முகலாய கட்டிடம்.

Image Source: unsplash-com

ஆக்ரா கோட்டை

ஷாஜகான் தலைநகரை டெல்லிக்கு மாற்றும் வரை முகலாயப் பேரரசர்களின் முதன்மையான இல்லமாக இருந்த ஓர் தளம் இந்த ஆக்ரா கோட்டை. இங்கு பிரம்மிக்க வைக்கும் அரண்மனைகள் மசூதிகள் மற்றும் தோட்டங்கள் மிகவும் பிரபலம்.

Image Source: unsplash-com

ஜமா மஸ்ஜித்

பேரரசன் ஷாஜகானால் கட்டப்பட்ட இந்த ஜமா மஸ்ஜித் டெல்லியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்று ஆகும்.

Image Source: unsplash-com

குதுப்மினார்

யுனெஸ்கோவால் உலக பாரம்பரியம் தளமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சுற்றுலா தளம் இந்த குதுப்மினார். இது உலகின் மிக உயரமான செங்கல் மினாரட் ஆகும். டெல்லியில் அமைந்துள்ள இந்த குதுப்மினார் இஸ்லாமிய கலையை அற்புதமாக கூறும் ஒரு வரலாற்று மிக்க இடம்.

Image Source: unsplash-com

அக்பர் கல்லறை

ஆக்ராவிற்கு அருகில் உள்ள சிக்கந்தராவில் அமைந்துள்ளது இந்த அக்பரின் கல்லறை. இந்த கல்லறை இஸ்லாமிய மற்றும் பாரசீக கட்டிடக்கலைகளால் சுற்றுலா செல்லும் மக்களை பிரம்மிக்க வைக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: கர்நாடகாவின் அழகிய மலைவாசஸ்தலம்.. கெம்மண்ணுகுண்டி பற்றி தெரியுமா?

[ad_2]