May 21, 2024
BY: Anojகசகசா, குங்குமப்பூ, முந்திரி மற்றும் மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் முகலாய ஸ்டைல் சிக்கன் ரிஸாலா உணவை எப்படி ரெடி செய்வது என்பதை இங்கு காணலாம்
Image Source: instagram-com/harman-singh_21
சிக்கன் - 500 கிராம்; உப்பு - தேவைக்கேற்ப; இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்; தயிர் - 1 கப்; மிளகு தூள் - அரை டீஸ்பூன்; வெங்காயம் - 3; எண்ணெய் - தேவையான அளவு; கசகசா - அரை டீஸ்பூன்; முந்திரி - 10; எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
நெய் - 1 டீஸ்பூன்; கிராம்பு - 3; பிரியாணி இலை - 1; இலவங்கப்பட்டை - 1; வர மிளகாய் - 3; வெண்ணெய் - 1 டீஸ்பூன்; தயிர் - அரை கப்; குங்குமப்பூ - 5; மிளகு - 15; ஏலக்காய் - 5; கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்; கொத்தமல்லி - சிறிதளவு
Image Source: istock
முதலில் ஒரு பவுலில் சிக்கனை சேர்க்க வேண்டும். அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 டீஸ்பூன் தயிர், மிளகு தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து சுமார் 20 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்
Image Source: istock
இப்போது வெங்காயம், உப்பு மற்றும் எண்ணெய் விட்டு பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். அதேபோல், ஊறவைத்த கசகசா மற்றும் முந்திரியை அரைத்து பேஸ்டாக்க வேண்டும்
Image Source: istock
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நெய், கிராம்பு, பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, வர மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அடுத்து வெண்ணெய் மற்றும் வெங்காய பேஸ்டை சேர்த்து வதக்க வேண்டும்
Image Source: pexels-com
இப்போது தயிர் மற்றும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். கடாயை மூடி சுமார் 10 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்
Image Source: istock
அடுத்து, குங்குமப்பூ, கசகசா - முந்திரி பேஸ்ட் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து அடுப்பில் வைக்க வேண்டும். இதற்கிடையில், மிளகு, ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதை நைசாக அரைத்து மசாலா பவுடர் தயாரிக்கவும்
Image Source: istock
மசாலா பவுடரை அடுப்பில் உள்ள கலவையை சேர்க்க வேண்டும். பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லியை தூவினால் டேஸ்டியான முகலாய சிக்கன் ரெடி. அதை பரோட்டா அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட செய்யலாம்
Image Source: instagram-com/hanglaatherium
Thanks For Reading!