[ad_1] முசோரியில் பார்க்க வேண்டிய அழகிய சுற்றுலா தலங்கள் இதோ!

May 31, 2024

முசோரியில் பார்க்க வேண்டிய அழகிய சுற்றுலா தலங்கள் இதோ!

mukesh M

முசோரி!

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு மலைப்பிரதேசம் முசோரி. கருவால் இமயமலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முசோரி ஒரு சிறந்த சுற்றுலா தலம். இங்கு நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பிரபலமான இடங்கள் குறித்து பார்க்கலாம்.

Image Source: unsplash-com

ஜபர்கெட் பூங்கா!

முசோரியில் அமைந்துள்ள ஜபர்கெட் நேச்சர் ரிசர்வ் பூங்கா விலங்குகளுக்கும் பல விதமான பூக்களுக்கும் தாயகமாக உள்ளது. இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா இடம் இது.

Image Source: unsplash-com

பெனோக் சரணாலயம்

முசோரியில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள வனவிலங்கு சரணாலயம் இந்த பெனோக் சரணாலயம். இங்கு நீங்கள் பலவிதமான பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து ரசிக்கலாம்.

Image Source: pexels-com

கிளவுட்ஸ் எண்ட்!

கிளவுட்ஸ் எண்ட் என்பது முசோரியின் பிரபல சுற்றுலா தளமாகும். இந்த இடத்தை சுற்றியுள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் காடுகளின் அற்புதமான இயற்கை காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை பிரம்மிக்க வைக்கும்.

Image Source: unsplash-com

லண்டூர்

இந்தப் பகுதியில் அழகான வீடுகள் மற்றும் பாரம்பரியமான கட்டிடங்களை நீங்கள் சுற்றி பார்க்கலாம். முசோரின் கலாச்சாரத்தை கூறும் வகையில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா இடம் இது.

Image Source: unsplash-com

மோஸி அருவி!

முசோரின் பசுமையான காடுகளின் நடுவே இந்த மோஸி அருவி அமைந்துள்ளது. முசோரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மத்தியில் இந்த அருவி ஒரு சிறந்த சுற்றுலா தலமாக மாறியள்ளது.

Image Source: unsplash-com

பட்டா அருவி!

முசோரியின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மற்றொரு இயற்கை அருவி இந்த பட்டா அருவி. அமைதியான சூழலில் உங்கள் சுற்றுலாவை அனுபவிக்க ஏற்ற ஒரு இடமாக இது உள்ளது!

Image Source: unsplash-com

லால் திப்பா!

முசோரியின் மிக உயரமான இடம் இந்த லால் திப்பா, பணி மூடிய இமயமலை சிகரங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் ஒரு அழகிய இடமாக இது பார்க்கப்படுகிறது!

Image Source: unsplash-com

மகிழ்ச்சி பள்ளத்தாக்கு!

பெரும்பாலான திபெத்தியர்கள் வாழும் ஒரு பகுதி இந்த பள்ளத்தாக்கு பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திபெத்தியர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள ஏற்ற ஒரு இடமாக இது பார்க்கப்படுகிறது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: இந்தியர்களின் பட்ஜெட்-க்கு ஏற்ற அழகிய ஐரோப்பிய நாடுகள்!

[ad_2]