May 13, 2024
முடி வளர்ச்சியில் ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதிகப்படியான ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் முடி உதிர்தலுக்கு வழி வகுக்கும். ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா போன்றவை மயிர்க்கால்களை பலவீனமாக்கலாம்.
Image Source: istock
சிலருக்கு பரம்பரை ரீதியாக முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை பிரச்சினை ஏற்படலாம். தாத்தா, பாட்டி, அம்மா அப்பா யாராவது முடி உதிர்தல் பிரச்சினையை சந்தித்து இருந்தால் அந்த பிரச்சினையை அவர்களும் சந்திக்கலாம்.
Image Source: istock
ஹைப்பர் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் இரண்டுமே உங்கள் முடி வளர்ச்சியை பாதிக்க கூடியது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் தான் உடல் செயல்பாடுகள் பலவற்றை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் முடி உதிர்தல் ஏற்படலாம்.
Image Source: istock
நமக்கு வயதாக வயதாக முடி வளர்ச்சி குறைகிறது. மயிர்க்கால்கள் முடி உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தக் கூடும். இதனால் முடி மெலிந்து போவதற்கும் முடி குறைத்து போகவும் வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
சில மருந்து வகைகள் உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சினையை ஏற்படுத்தலாம். ரத்தத்தை மெலிந்து போகச் செய்யும் மருந்துகள், வாய்வழி கருத்தடை மருந்துகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ரெட்டினாய்டுகள் போன்றவை முடி மெலிதலை உண்டாக்குகிறது.
Image Source: istock
மன அழுத்தம் கூட முடி உதிர்தலுக்கு காரணமாக அமைகிறது. டெலோஜென் எஃப்ளூவியம் எனப்படும் நிலை முடி மெலிதலை உண்டாக்குகிறது. எனவே மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
Image Source: istock
கலரிங், பெர்மிங் அல்லது அதிகப்படியான ஹீட் ஸ்டைலிங் செய்வது முடியை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதுவும் முடி உதிர்தலுக்கு வழி வகுக்கும்.
Image Source: pexels-com
முடி வளர்ச்சியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது முடி உதிர்தலுக்கு வழி வகுக்கிறது. ஊட்டச்சத்துக்கள் குறைபாடு உங்கள் முடி வளர்ச்சியை பெருமளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.
Image Source: istock
விபத்துக்கள், அறுவை சிகிச்சைகள், தீக்காயங்கள் அல்லது கடுமையான நோய்கள் போன்ற கடுமையான உடல் அதிர்ச்சிகள் முடி வளர்ச்சியை பாதிக்க வாய்ப்புள்ளது.
Image Source: istock
Thanks For Reading!