Jul 16, 2024
இந்த இயற்கையான ஹேர் கண்டிஷனரை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். இதில் இயற்கையான பொருட்களான தேன், ஆலிவ் எண்ணெய், முட்டை, சமையல் சோடா, தேங்காய் எண்ணெய் மற்றும் வாழைப்பழம் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
Image Source: pexels-com
தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலவையானது கூந்தலை மென்மையாக்கும், இது கூந்தலுக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது. முடி உதிர்தலை தடுக்கிறது. பொடுகுத் தொல்லையை போக்குகிறது.
Image Source: istock
முட்டை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இது முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் நிறைய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டையுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தும் போது பளபளப்பான கூந்தலை பெறலாம்.
Image Source: istock
சமையல் சோடாவில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றை தடுக்கிறது. தலையை நன்றாக சுத்தம் செய்கிறது. கூந்தலை வலிமையாக்குகிறது.
Image Source: istock
தேங்காய் எண்ணெயில் நிறைய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடையக் கூடிய கூந்தலைக் கூட வலிமையாக்குகிறது. தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு ஆழமாக ஊட்டமளிக்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான பளபளப்பை பெறலாம்.
Image Source: istock
வாழைப்பழத்தில் சிலிக்கா அதிகளவில் உள்ளது. இது முடி உதிர்தலை குறைப்பதோடு தலைமுடியை பளபளப்பாகவும், மென்மையாக வைக்கவும் உதவுகிறது. எனவே வாழைப்பழ பேஸ்ட்டுடன் சிறுதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து பொடுகை போக்கலாம்.
Image Source: istock
ஷியா வெண்ணெயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இதில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளன. இவை கூந்தலுக்கு வலிமையை கொடுப்பதோடு பொடுகுத் தொல்லையை தடுக்கிறது.
Image Source: istock
தேங்காய் பால் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டுமே தலைமுடியை சேதத்தில் இருந்து காக்கிறது. இது ஒவ்வொரு மயிர்க்கால்களையும் பலப்படுத்துகிறது. இது உச்சந்தலையில் பொடுகு ஏற்படுவதை தடுக்கிறது.
Image Source: istock
ஆப்பிள் சிடார் வினிகர் கூந்தலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இது கூந்தலை மாற்றி தலைமுடியை மிருதுவாகவும் மென்மையாகவும் வைக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!