Jun 13, 2024
விளக்கெண்ணெய் பல ஆண்டுகளாக கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த எண்ணெயில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
Image Source: istock
தேங்காய் எண்ணெயில் ஹைட்ரேட்டிங் பண்புகள் உள்ளன. இதில் கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது முடியில் உள்ள புரத இழப்பை தடுக்கிறது. ஒட்டுமொத்த முடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.
Image Source: istock
விளக்கெண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையில் ஏற்படும் தொற்று, பொடுகுத் தொல்லையை எதிர்த்து போராட உதவுகிறது.
Image Source: istock
விளக்கெண்ணெயில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மயிர்க்கால்களை வலுவாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் மயிர்க்கால்களை வலுவாக்கி கூந்தல் உடைவதை தடுக்கிறது.
Image Source: pexels-com
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் இரண்டுமே சிறந்த கேரியர் எண்ணெய்யாகும். அதனால் இது மயிர்க்கால்களால் எளிதாக உறிஞ்சப்படுகிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
Image Source: istock
2 டீஸ்பூன் விளக்கெண்ணெய், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும்.
Image Source: istock
இப்பொழுது தலைமுடியை இரண்டாக பிரித்து அதில் எண்ணெயை தடவி உச்சந்தலையில் 5-10 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது உச்சந்தலை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
Image Source: istock
குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் எண்ணெய் அப்படியே இருக்கட்டும் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். பிறகு வெதுவெதுப்பான நீர் மற்றும் மைல்டு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!