Jun 20, 2024
வெற்றிலை செரிமானத்திற்கு உதவும் என்பதே நம்முள் பலரும் அறிந்த தகவல். ஆனால் வெற்றிலை நமது தலைமுடி வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இப்பதிவில் காண்போம்.
Image Source: pexels
தினமும் ஒரு வெற்றிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தலைமுடி ஆரோக்கியம் சீராகும். வெற்றிலையில் உள்ள இரும்புசத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ,சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் முடியினை பலப்படுத்த உதவுகிறது.
Image Source: istock
வெற்றிலை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தினை தூண்டி, முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வேர் வரை செல்வதை உறுதி செய்து புதிதான முடி வளர்வதையும் ஊக்குவிக்கிறது
Image Source: istock
வெற்றிலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு பொடுகு தொல்லையில் இருந்தும் பாதுகாக்கிறது. இதனால் முடி உதிர்வு தடுக்கப்படுகிறது.
Image Source: istock
வெற்றிலையில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் சுற்றுச்சூழல் மாசுகளில் இருந்து முடியினை பாதுகாக்கிறது. முடிக்கு பளபளப்பு தன்மையை கொடுக்கும் பண்பும் வெற்றிலையில் உள்ளது.
Image Source: istock
தலைமுடிக்கு ஏற்ப 5ல் இருந்து 10 வெற்றிலைகளை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் சிறிதளவு தேன் மற்றும் நெய் சேர்த்து ஒரு சேர கிளறி விட்டால் ஹேர் மாஸ்க் தயார்.
Image Source: istock
அந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியின் வேர் வரை படும்படி தடவி 5 நிமிடங்களுக்கு மெதுவாக நன்கு மசாஜ் செய்து விடுங்கள். 30 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் முடியினை கழுவுங்கள். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் முடியின் வளர்ச்சி பெருமளவில் இருக்கும்.
Image Source: istock
வெற்றிலையில் இயற்கையான கண்டிஷனர் பண்புகள் உள்ளது. வெற்றிலை சாறு அல்லது அதன் எண்ணெய்யினை கண்டிஷனராக பயன்படுத்தினால் முடி ஈரப்பதத்துடன் மற்றும் மென்மையாகவும் இருக்கும்.
Image Source: pexels
வெற்றிலையில் உள்ள நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியளிப்பதோடு, மனதிற்கும் நிம்மதி அளிக்கக்கூடியது. வெற்றிலை கொண்டு தயாரிக்கப்படும் முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஸ்பா அனுபவத்தினை வீட்டிலேயே பெறலாம்.
Image Source: pexels
Thanks For Reading!