Aug 21, 2024
தலைமுடி உதிர்வை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும் யோகாசனங்கள் உதவி புரிகின்றன. இந்தப் பதிவில், முடி அடர்ச்சியாக வளர்வதற்கு தலைகீழாக நிற்கும் சிரசாசனம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்
Image Source: pexels-com
இந்த ஆசனத்தை செய்யும் முன்பு ஸ்ட்ரெச்சிங் மற்றும் மூச்சுப்பயிற்சியில் சில நிமிடங்கள் செலவிட வேண்டும். இது தசைகளை அழுத்தத்தை குறைப்பதோடு விழிப்புணர்வு அளவை மேம்படுத்தக்கூடும்
Image Source: istock
இதனை சமமான மேற்பரப்பை கொண்ட இடத்தில் செய்ய வேண்டும். முக்கியமாக தண்ணீர் இல்லாததை உறுதி செய்துகொள்ளுங்கள். காயத்தை தவிர்க்க யோகா மேட்டில் செய்வது சிறந்த முடிவாகும். உடல் தோரணையும் எளிதாக பராமரிக்க முடியும்
Image Source: istock
தலைகீழாக நிற்கும் ஆசனத்தில் முன்கைகளின் ஆதரவு மிகவும் முக்கியமாகும். அவற்றை தரையில் சரியாக வைத்துகொள்வது, உங்களது உடல் எடையை சரியாக சமநிலைப்படுத்த உதவுவது மட்டுமின்றி கழுத்தில் அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது
Image Source: istock
தரையில் தலையை ஊன்றி முன்னங்கை சரியான பொசிஷனில் வைத்துவிட்டு, கால்களை மெதுவாக உயர்த்த வேண்டும். அப்போது தான், சரியாக பேலன்ஸ் செய்ய முடியும்
Image Source: istock
கால்களை மேலே உயர்த்திவிட்டு சுமார் 30 முதல் 60 நொடிகள் அப்படியே இருக்க வேண்டும். ஆரம்பத்தில் குறைவாகவும் பிறகு படிபடியாக நேரத்தை அதிகரிக்க செய்யலாம். இதனை புதிதாக செய்பவர்கள் சுவற்றில் சாய்ந்து செய்யலாம்
Image Source: instagram-com/yogawithraynu
பிறகு, கால்களை பொறுமையாக கீழே இறக்கி மேட்டிற்கு கொண்டு வர வேண்டும். சட்டென இறக்குவது தசைகளில் தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்கக்கூடும்.
Image Source: istock
இந்த ஆசனம் உச்சந்தலையில் சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுத்து, தலைமுடி உதிர்வதையும், மெலிந்த தலைமுடியும் போக்கக்கூடும். முக்கியமாக, நரைமுடி முன்கூட்டியே வருவதை தடுத்திட முடியும். கூந்தல் அடர்த்தியாக வளர மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும்
Image Source: istock
தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வின்படி, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது
Image Source: istock
Thanks For Reading!