[ad_1] முடி வளர்ச்சியை தூண்டும் துளசி எண்ணெய் - எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?

Jul 12, 2024

முடி வளர்ச்சியை தூண்டும் துளசி எண்ணெய் - எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?

Anoj

துளசி எண்ணெய்

ஆயுர்வேதத்தில் முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் துளசி எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை, முடி வளர்ச்சியை தூண்டவும், மயிர்கால்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. அதனை எப்படி யூஸ் செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: istock

உச்சந்தலை மசாஜ்

உச்சந்தலையில் துளசி எண்ணெயை தடவி மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. தொடர்ச்சியாக மசாஜ் செய்து வந்தால் தூக்க தரமும் மேம்படக்கூடும்

Image Source: pexels-com

ஹேர் மாஸ்க்

துளசி எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை மிக்ஸ் செய்து கூந்தலில் அப்ளை செய்யலாம். இது முடிக்கு ஊட்டச்சத்து அளித்து வலுவாக்க உதவுகிறது. 30 நிமிடங்கள் வைத்திருப்பது மூலம் தலைமுடியில் எண்ணெய் ஆழமாக ஊடுருவக்கூடும்

Image Source: istock

பொடுகு சிகிச்சை

துளசி எண்ணெயின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பொடுகை எதிர்த்து போராடவும் உச்சந்தலை அரிப்பை போக்கவும் உதவுகிறது. உச்சந்தலை ஆரோக்கியத்தை பாதுகாத்து முடி வளர்ச்சியை தூண்ட உதவக்கூடும்

Image Source: istock

முடி வளர்ச்சி சீரம்

துளசி எண்ணெயுடன் அத்தியாவசிய எண்ணெயான ரோஸ்மேரியை சேர்த்து சீரம் தயாரிக்க செய்யலாம். அதனை கூந்தலில் அப்ளை செய்வது மயிர்கால்களை தூண்டி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்திடும்

Image Source: istock

ஷாம்புவுக்கு முன்பாக.,

கூந்தலில் ஷாம்பு அப்ளை செய்யும் முன்பு, துளசி எண்ணெயை தடவ செய்யலாம். இது முடிக்கு ஊட்டச்சத்து அளித்து முடி உடைதலை தடுப்பதோடு நுனி முடி பிளவு ஏற்படுவதை குறைக்கக்கூடும்

Image Source: istock

ஹேர் ஆயில் கலவை

துளசி எண்ணெயுடன் பயோட்டின் அல்லது கெரட்டின் உள்ள முடி வளர்ச்சி தூண்டும் ஆயிலை சேர்க்க வேண்டும். அந்த கலவை கூந்தலை பாதுகாத்து முடி வளர்ச்சி 2 மடங்காக அதிகரிக்கக்கூடும்

Image Source: istock

ஹேர் ஸ்டீமிங்

மயிர்கால்களை தூண்டவும், பொடுகை விரட்டவும் ஹேர் ஸ்டீமிங் பிராசஸ் நிச்சயம் உதவியாக இருக்கும். துளசி எண்ணெயின் சத்துக்கள் கூந்தலில் ஆழமாக ஊடுருவ, ஹேர் ஸ்டீமிங்கில் வரும் வெப்பம் உதவக்கூடும்

Image Source: istock

குறிப்பு

துளசியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், நிச்சயம் தலைமுடி ஆரோக்கியத்தை காக்கக்கூடும். சிறந்த பலனை பெற இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள செய்முறைகளை வாரத்திற்கு 2 முறையாவது முயற்சிக்க வேண்டும்

Image Source: istock

Thanks For Reading!

Next: வீட்டிலேயே 'மெனிக்யூர்' செய்வது எப்படி?

[ad_2]