[ad_1] முட்டையில்லா ‘ரவை - மாம்பழ கேக்’ செய்முறை!

Jun 24, 2024

முட்டையில்லா ‘ரவை - மாம்பழ கேக்’ செய்முறை!

mukesh M

ரவை - மாம்பழ கேக் செய்முறை!

மாம்பழத்துடன் ரவை மற்றும் உலர் பழங்கள் சேர்த்து மிகவும் எளிமையான கேக் ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

மாம்பழம் - 2 | ரவை - 1 கப் | சர்க்கரை - 1 கப் | பால் - ¼ கப் | சமையல் எண்ணெய் - ¼ கப் | பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன் | உலர் பழங்கள் - 1 கப்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட ரவையை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

பின் எடுத்துக்கொண்ட மாம்பழத்தை தோல், விதை நீக்கி சுத்தம் செய்து, பின் சிறுதுண்டாக நறுக்கி மிக்ஸி அதே மிக்ஸி ஜாரில்சேர்த்து விழுதாக அரைத்து ரவை பொடி உள்ள பாத்திரத்தில் மாற்றவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 3

பின் இதனுடன் எண்ணெய், சர்க்கரை, பால், பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லா வகையில் நன்கு கரைத்து 20 நிமிடங்கள் வரை புளிக்க வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

தொடர்ந்து எடுத்துக்கொண்ட உலர் பழங்களை பொடியாக நறுக்கி இந்த சேர்மத்துடன் சேர்த்து நன்கு கலந்துவிட கேக் சேர்மம் ரெடி!

Image Source: istock

செய்முறை படி - 5

தற்போது கேக் செய்ய எடுத்துக்கொண்ட ஓவனை 180°C வெப்பநிலையில் 20 - 25 நிமிடங்களுக்கு Preheat செய்து தயார் நிலையில் வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 6

இதனிடையே பேக்கிங் ட்ரே ஒன்றினை எடுத்து, எண்ணெய் தடவி தயார் செய்து பின் இதில் கேக் சேர்மத்தை சேர்த்துக்கொள்ளவும்.

Image Source: istock

ரவை - மாம்பழம் கேக் ரெடி!

தற்போது, தயாராக இருக்கும் ஓவனில் இந்த பேக்கிங் ட்ரேவினை வைத்து 180°C வெப்பநிலையில் 35 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்க சுவையான ரவை மாம்பழம் கேக் ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: சாலையோர கடைகளில் விற்பனையாகும் 'சீஸ் தோசை' எப்படி வீட்டிலேயே செய்வது?

[ad_2]